ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு என்றால்? கனிமொழி எம்பி ட்விட்டரில் சரமாரி கேள்வி
அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழி, இன்று வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில்., "அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது.

ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.