சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர்களை ஏமாற்றியது யார்? கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி!

வன்னியர்களை ஏமாற்றி அவர்களை கறிவேப்பிலையாக தூக்கி ஏறிந்தது ராமதாஸ்தான் என்று திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் டிவிட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வன்னியர்களை ஏமாற்றியது யார்?.. கணக்கு போட்டு காட்டிய எம்.பி செந்தில் குமார்-வீடியோ

    சென்னை: வன்னியர்களை ஏமாற்றி அவர்களை கறிவேப்பிலையாக தூக்கி ஏறிந்தது ராமதாஸ்தான் என்று திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் டிவிட் செய்துள்ளார்.

    வன்னியர்களுக்கு யார் சலுகைகள் வழங்கியது, யார் ஆதரவாக இருந்தது என்பது தொடர்பான விவாதம் தற்போது திமுக பாமக இடையே எழுந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கைதான் இதற்கு காரணம் ஆகும்.

    ஸ்டாலின் தனது அறிக்கையில், திமுகதான் வன்னியர்கள் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளித்தது. வன்னியர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக அப்போதைய அதிமுக அரசு வன்முறையை கையாண்டது.

    ஆனால் எப்படி

    ஆனால் எப்படி

    ஆனால் திமுக தலைவர் கருணாநிதிதான் அந்த போராட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். அதுபோல் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார்.

    ஆட்சி எப்படி

    ஆட்சி எப்படி

    திமுக ஆட்சி வந்தால் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்கப்படும். வன்னிய சமுதாய மக்களுக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை, என்று குறிப்பிட்டார்.இந்த நிலையில் இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்தார். அதில், ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின் இப்போது வன்னியர்கள் மீது கரிசனம் இருப்பது போல நடிக்கிறார்.

    தேர்தல்

    தேர்தல்

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர் வன்னியர்களுக்கு ஆதரவாக பேசுவது போல நடிக்கிறார். வன்னியர்களை தேர்தல் நேரத்தில் மட்டும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு தி.மு.க இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை என்று ராமதாஸ் குறிப்பிட்டு இருந்தார்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    அதோடு வன்னியர்களை பற்றி பேசும் ஸ்டாலின் எவ்வளவு வன்னியர்களுக்கு கட்சியில், தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளார். எத்தனை பேருக்கு அவர் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பை கொடுத்து இருக்கிறார். தேர்தலுக்காக கருவேப்பிலை போல வன்னியர்களை ஸ்டாலின் பயன்படுத்துகிறார் என்று ராமதாஸ் குறிப்பிட்டார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு தற்போது தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் பதில் அளித்துள்ளார். அதில், ஐயா ராமதாஸ், #ஒரு_சந்தேகம். திமுக போட்டியிட்ட 20 இடங்களில் 5 இடங்களில், சேலம், வேலூர், மயிலாடுதுறை, அரக்கோணம், தர்மபுரி ஆகிய இடங்களில் நீங்கள் சொல்லும் சமுதாயம் சார்பாக திமுகவில் வென்றவர்கள்.

    என்ன சமுதாயம்

    அதாவது திமுக சார்பாக வென்றதில் 25% பேர் நீங்கள் சொல்லும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதே சமயம் நீங்கள் போட்டியிட்டது 7 இடங்கள். நீங்கள் வன்னியர்களுக்கு கொடுத்த இடம் வெறும் 3. இப்போ சொல்லுங்க #கறிவேப்பிலையா_தூக்கி_ஏறிந்தது_யாரு? நீங்கள் தான், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    ஏமாற்றம்

    மேலும், பொய்., மீண்டும் பொய்., தோழர்களே, ராமதாஸ் இப்படி தான் மாவீரன் குரு குடும்பத்தை ஏமாற்றினார். இடஒதுக்கீட்டில் உயிர் நீத்த குடும்பங்களை ஏமாற்றினார்.,வீரப்பன் குடும்பத்தை ஏமாற்றினார். இளைஞர்களே ஏமாறாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்., என்றும் செந்தில் குமார் டிவிட் செய்துள்ளார்.

    English summary
    DMK MP Senthil Kumar replied to Ramadoss on the Vanniyar issue in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X