India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிபரே! ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் - சீமானின் பதிவுக்கு திமுக எம்.பி.செந்தில்குமார் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: மின்வெட்டு தொடர்பாக ட்விட்டரில் விமர்சித்திருந்த சீமானை, ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் என தருமபுரி திமுக எம்.பி. ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

    Seeman VS SenthilBalaji | Twitter-ல் நடந்த காரசார விவாதம் | Oneindia Tamil

    திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அக்கட்சினர் திராவிட மாடல் அரசின் சாதனைகள் என பட்டியலிக்கு கொண்டாடி வருகின்றனர்.

    அதேநேரம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓராண்டுகால திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

    மண்ணின் மைந்தர்களை அகதிகளாக விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?...சீமான் கொதிப்பு மண்ணின் மைந்தர்களை அகதிகளாக விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?...சீமான் கொதிப்பு

     சீமான் விமர்சனம்

    சீமான் விமர்சனம்

    அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நேற்று ட்விட்டரில் அதிகளவில் டிரெண்டானது. "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என அவர் தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை பிரச்சனையை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

     செந்தில் பாலாஜி பதில்

    செந்தில் பாலாஜி பதில்

    இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே' மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

     குடிசையில் இடம் கிடைக்குமா?

    குடிசையில் இடம் கிடைக்குமா?

    இதற்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்த சீமான், "மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" என தெரிவித்து இருந்தார்.

     மின் இணைப்பு எண் கொடுங்க

    மின் இணைப்பு எண் கொடுங்க

    சீமானின் இக்கருத்துக்கு மீண்டும் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், "குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

     செந்தில்குமார் விளக்கம்

    செந்தில்குமார் விளக்கம்

    இந்த நிலையில் சீமானின் கருத்து குறித்து தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். அதில், "அதிபரே! உங்களுக்கு என்ன., என்ன வேண்டுமானாலும் கேட்பிங்க. ஆனா தப்பான விலாசதுல கேட்கிறீங்க. உங்களுக்கு படி அளக்க இது உங்க அதிமுகவும் கிடையாது. உங்க பாஜகவும் கிடையாது. இது உடன் பிறப்புகளின் திமுக. ஆமையின் வால் ஒட்ட நருக்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    DMK MP Senthilkumar Reply to Seeman On Power Cut Issue: மின்வெட்டு தொடர்பாக ட்விட்டரில் விமர்சித்திருந்த சீமானை, ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் என தருமபுரி திமுக எம்.பி. ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X