சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாத்துக்கும் காரணம் அமித்ஷா தான்.. சாணக்கிய மூளை.. வாசனுக்கு வச்ச குறி.. ஒரே கல்லில் 2 தாமரை

ஜிகே வாசனை தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்ட உத்தரவுதான் இது எல்லாத்துக்கும் காரணம்.. தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு தந்த எம்பி சீட்டால் விழி பிதுங்கி உள்ளது அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல... திமுக உள்ளிட்ட தமிழக காங்கிரசும்தான்!

நேற்றிலிருந்து ஜி.கே.வாசன் தான் தமிழக அரசியலில் ஆச்சரியத்தையும் & அதிர்ச்சியையும் சேர்த்து கிளப்பி விட்டு வருகிறார். அவருக்கு கிடைத்த சீட் அப்படி... இலவு காத்த கிளி போல பலர் காத்திருக்க... தேமுதிகவெல்லாம் தேவுடு காத்து நிற்க.. லட்டு போல வந்து வாசன் வாயில் விழுந்துள்ளது சீட்!

சில தினங்களுக்கு முன்பு, டெல்லிக்கு அமித்ஷாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள் சென்றிருந்தனர்.. சிஏஏ விவகாரம் பற்றியும், திமுக இதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்து வருவதால், என்ஆர்சி வேண்டாம் என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் அமித்ஷாவிடம் தெரிவித்தனர்.

ராஜ்ய சபா சீட்

ராஜ்ய சபா சீட்

"அப்படி ஒரு தீர்மானத்தை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம், நீங்கள் இப்படி செய்தால், நாளைக்கு இன்னொருத்தர் வந்து கேட்பாங்க" என்று மறுத்த அமித்ஷா, அந்த சமயத்தில்தான் தமாகா தலைவர் வாசனுக்கு ராஜ்யசபா சீட் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அமித்ஷாவின் உத்தரவைதான் அப்போதே முரளிதரராவும் முதல்வரை வீட்டில் சந்தித்து தனியாக தெரிவித்துள்ளார். அமித்ஷா கேட்டுக் கொண்டபடியே வாசனுக்கு சீட் தந்தாகிவிட்டது.. ஆனால் இது ஏகப்பட்ட பிரச்சனைகளை கட்சி ரீதியாக ஏற்படுத்தி வருகிறது.

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

முதலாவதாக, வாசனுக்கு சீட் தரும்படி பாஜக தெரிவிக்க என்ன காரணம் என்று தமாகா தரப்பிலேயே விசாரித்தோம்.. எம்பி தேர்தலின்போதே பாமகவைப் போல ராஜ்ய சபா எம்பி பதவியை பாஜகவும் கேட்டிருந்தது.. ஆனால் அப்போது தரப்படவில்லை.. வாசனை பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் டிமாண்ட் செய்ததே கிடையாது.. நெருக்கடியும் தர மாட்டார்.. தனிப்பட்ட மரியாதை இவருக்கு எல்லா கட்சியினரிடமும் உள்ளதுதான் காரணம்.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

அதனால்தான் தமாகா தொடங்கியபோது முக்கிய நிர்வாகிகள் வாசனை நம்பி வந்தனர்.. தன் கட்சி ரீதியான தோல்வியை கண்டாலும் வாசன் அரசியல் பாகுபாடின்றி தலைவர்களுக்கு தரும் மரியாதை அனைவரையும் ஈர்த்துள்ளதே முக்கிய காரணம்.. இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. மற்றவர்களை விட்டு விட்டு வாசனிடம் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி... பாஜகவினரே இதை எதிர்பார்க்கலை. டெல்லிக்கும் வரவழைத்து பிரதமர் பேசினார்.

தமிழக பாஜக தலைவர்

தமிழக பாஜக தலைவர்

ஆனால் அப்போதுகூட தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று வாசன் கேட்கவே இல்லை... தமிழக கோரிக்கைகள் பற்றி மட்டுமே சொல்லிவிட்டு வந்ததுதான் பிரதமருக்கு வாசனை ரொம்பவும் பிடித்து போயிருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான் விரைவில் பாஜக மாநில தலைவராக வாசனை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூடுதலாக ஒரு தகவலை சொல்கிறார்கள். வாசனுக்கு சீட் தந்ததால், அதிமுகவின் சீனியர் தலைகள் அதிருப்தியில் உள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான்.. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி இதனை எதிர்பார்க்கவே இல்லை..

அழுத்தங்கள்

அழுத்தங்கள்

ஏனென்றால், தமாகாவுக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை... காங்கிரஸை விட குறைவான செல்வாக்குதான் உள்ளது.. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 8 எம்எல்ஏக்கள் உள்ளனர்.. ஆனால் எவ்வளவோ உதவிகளை செய்தும் திமுக தங்களுக்கு ஒரு சீட்கூட தரவில்லை.. இத்தனைக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தங்கள் தரப்பட்டன.. அந்த அழுத்தங்கள் சோனியா மூலம் திமுகவுக்கும் வந்தது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

எனினும், மேலும் அழுத்தங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ராஜ்யசபா திமுக வேட்பாளர்கள் வேகமாக அறிவிக்கப்பட்டு விட்டதாக தமிழக காங்கிரஸார் புலம்புகிறார்கள்... இது ஒரு வகையில் சோனியாவுக்கும் வருத்தம்தானாம்.. அதிமுக அணியில் தமாகாவுக்கு கிடைக்கும் மரியாதை கூட திமுக அணியில் காங்கிரஸுக்கு இல்லையே என்பதுதான் அவர்களின் குமுறலாக உள்ளது.

திமுக செந்தில்குமார்

ஆனால், திமுக எம்பி செந்தில்குமார் தன்னுடைய ட்வீட்டில் வாசனுக்கு சீட் கிடைத்ததை நக்கலாகவே தெரிவித்துள்ளார்.. "GKவாசனுக்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட், விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார். அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி, என்ன கொடுமை சார் இது" என பதிவிட்டுள்ளார்.

மறுக்க முடியாது

மறுக்க முடியாது

இந்த ட்வீட்டினை சாதாரணமாகவும் நாம் ஒதுக்கிவிட முடியாது.. அமித்ஷா எதையுமே ஆழமாக யோசித்து முடிவு செய்வார்.. வாசனின் அரசியல் அனுபவம், மாற்று கட்சி தலைவர்களை அனுசரித்து போகும் குணம்... யாரையுமே காயப்படுத்தாத இயல்பு... குறிப்பாக மூப்பனார் அவரை வளர்த்த விதம்.. போன்ற நல்லியல்புகளை யாராலும் மறுக்க முடியாது.. இப்படிப்பட்டவர் தமிழக பாஜக தலைவராக நியமித்தால் அது நிச்சயம் பாஜகவுக்குதான் சாதகமாக இருக்கும்.. அந்த வகையில் அமித்ஷாவின் கணக்கு தப்பாது என்றே தெரிகிறது!

ஒருவேளை ஜிகே வாசன் தமிழக பாஜக தலைவரானால்.. நிச்சயம் தமிழிசை போல இவரும் படு வித்தியாசமாக செயல்படுவார் என்று மட்டும் எதிர்பார்க்கலாம்!

English summary
dmk mp senthil kumar said gk vasan will be next tamilnadu bjp leader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X