சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது கட்சியினரா?.. பாமகவில் 5 அல்லது 10 பேர்தான் உள்ளார்கள்?.. ராமதாஸை விமர்சித்த திமுக எம்பி

Google Oneindia Tamil News

சென்னை: திரௌபதி படத்தை கட்சியினருடன் பார்த்தீர்களா. உங்கள் கட்சியில் 5 முதல் 10 பேர் வரைதானே உள்ளார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸை தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து திமுகவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு புலப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி எம்பி தொகுதியில் இரு முறை எம்பியாக இருந்தவர் அன்புமணி ராமதாஸ்.

இந்த 2019-ஆம் ஆண்டு அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமார் களமிறக்கப்பட்டு அத்தொகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதனால் பாமக அண்மைக்காலமா பாஜகவையோ அல்லது அதிமுகவையோ விமர்சிப்பது இல்லை. இதனால் திமுகவையே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவர் விமர்சனம் செய்யாவிட்டாலும் அவர் போடும் ட்வீட்களுக்கு பதிலடியை திமுக எம்பி செந்தில்குமார் தவறாமல் கொடுத்து வருகிறார்.

டெல்லி

டெல்லி

வண்ணாரப்பேட்டை மற்றும் டெல்லியில் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தான் தொப்பி அணியாத இஸ்லாமியர் என அவ்வப்போது ராமதாஸ் கூறி வருவதை நினைவுக்கூர்ந்த செந்தில்குமார், டெல்லி கலவரத்தில் இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள், தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே என பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

அது போல் ராமதாஸ் தனது ட்விட்டர் திரௌபதி திரைப்படத்தை பார்த்துவிட்டு அது குறித்த கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில் பெண்ணுரிமை பேசும் திரௌபதி திரைப்படத்தை இரண்டாவது முறையாக நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் பா.ம.க. நிர்வாகிகள் இசக்கி படையாட்சி, செல்வகுமார், வண்ணை இராதாகிருஷ்ணன், எனது பெயரன் முகுந்தன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருடன் பார்த்தேன் என குறிப்பிட்டு 3 புகைப்படங்களை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

பூத்தில் இருக்காங்களா

இதையும் விடாத செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐயா
@drramadoss

1stகாட்சி-23 பேர்
2nd காட்சி-5 பேர் உடன்
3rd காட்சி-நீங்கள் மட்டுமா ஐயா?

'நிர்வாகிகள்/கட்சியினருடன் பார்த்தேன்'

என்று பதிவிட்டுளிர்கள் நம்ம கட்சியில் 5-10 பேர் தான் உள்ளார்களா.
எல்லாம் நம்பிக்கை இழந்து போய்விட்டார்ககளா

இல்ல இன்னும்மும் பூத் ல இருக்காங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
DMK MP Senthilkumar criticises PMK Founder Ramadoss that he has only 5 to 10 members, then how could he say pmk is a party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X