சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

97% அட்டடென்ஸ்.. 75 கேள்விகள்;91 விவாதங்கள்..நாடாளுமன்றத்தை கலக்கிய திமுக எம்.பி.. ஸ்டாலின் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: நமது நாட்டின் நாடாளுமன்றத்தில்தான் நாட்டின் முக்கிய திட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது எம்.பி.க்கள் கையில்தான் இருக்கிறது.

நைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி! நைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி!

நாடாளுமன்றத்தில் தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது, சட்டங்கள் இயற்றுவது, அரசு நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளும் எம்.பி.க்களுக்கு உள்ளன.

 எம்.பி.யின் பொறுப்பு என்ன?

எம்.பி.யின் பொறுப்பு என்ன?

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு முக்கிய மசோதாக்களை கொண்டு வர எதிர்கட்சி உறுப்பினர்களின் தயவு தேவை இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட திட்டம் தொடர்பான மசோதாக்களை தனிநபர் மசோதாவாக கொண்டு வர ஒரு எம்.பி.யால் முடியும். இது தவிர நாடாளுமன்றத்தில் திட்டங்கள் குறித்து வலுவான கேள்வி எழுப்பும் விதம், அந்த திட்டம் மீதான புரிதல் ஆகியவை ஒரு எம்.பி.யின் செயல்பாடுகளில் அடங்கி இருக்கிறது.

சிலர் கடமையை செய்வதில்லை

சிலர் கடமையை செய்வதில்லை

ஆனால் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் சில எம்.பி.க்கள் தங்கள் கடமையை சரிவர செய்வதில்லை. அங்கு முக்கிய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் இல்லை. ஏன் ஒரு சில எம்.பி.க்கள் கூட்டத்தொடர் நடக்கும்போது நாடாளுமன்றத்துக்கு முறையாக செல்வது கூட கிடையாது.

தி.மு.க எம்.பி வில்சன்

தி.மு.க எம்.பி வில்சன்

ஆனால் இத்தகைய எம்.பி.க்களை போல் அல்லாமல் கடந்த இரண்டு வருடங்களாக தனது சிறப்பான செயல்பாடுகளால் நாடாளுமன்றத்தை கலக்கி இருக்கிறார் தி.மு.க எம்.பி வில்சன். கடந்த 2019-ம் ஆண்டு தி.மு.க ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார் வில்சன். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அனுமதி மறுத்து விட்டது.

ஸ்டாலின் கவுரவம்

ஸ்டாலின் கவுரவம்

ஆனால் தி.மு.க, உயர்நீதிமன்றம் சென்று இதற்கான அனுமதி பெற்று கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்தது. உயர்நீதிமன்றத்தில் வாதாடி கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முக்கிய காரணமாக இருந்தவர்தான் தி.மு.க வழக்கறிஞராக இருந்த இந்த வில்சன். இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே அவரது ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கி கவுரவித்தார் மு.க.ஸ்டாலின். அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக சிறப்பாக செயல்பட்டுள்ளார் எம்.பி. வில்சன்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

கடந்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றம் நடந்த நாட்களில் 97% வருகை புரிந்துள்ளார். 91 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 75 கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி உள்ளார். 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதத்தில் பங்கேற்றுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து விலக்கு, சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி வில்சன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாராட்டை பெற்றுள்ளார். தி.மு.க எம்.பி வில்சனின் சிறப்பான செயல்பாட்டுக்காக திமுகவினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

English summary
DMK MP Wilson has been praised by various quarters for his excellent performance in Parliament. He also met with MK Stalin and received praise
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X