சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி கவலை இல்லை.. நமக்காக இருக்காங்க.. காத்திருக்கும் புதிய எம்பிக்கள்.. நம்பிக்கையில் தமிழகம்!

தமிழக நலனுக்காக திமுக எம்பிக்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN MP's: காத்திருக்கும் புதிய எம்பிக்கள்.. நம்பிக்கையில் தமிழகம்!- வீடியோ

    சென்னை: தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழக மக்களுக்கு புதிய பலத்தை தந்திருக்கிறார்கள்.

    இதுவரை தமிழகம் கண்ட சுகம்தான் என்ன? வளம்தான் என்ன? ஒன்னுமில்லை.. தமிழக நலன் மக்களவையில் பேசப்படவே இல்லை என்பதும், உரிய முறையில் அவை எடுத்துரைக்கப்பட வே இல்லை என்பதும்தான் வருத்தமே!

    வளர்ச்சி திட்டங்களும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை, அதற்கான முயற்சிகளும் கையாளப்படவில்லை. இவர்கள் 37 பேர் இருந்தும், ஒருநலனையும் பெறாவிட்டாலும் பரவாயில்லை, இங்கிருப்பதை தாரை வார்த்து கொடுப்பதையும் தடுத்து நிறுத்தவில்லை என்பதே மக்களின் வேதனை!

    மோடியை டம்மியாக்கவந்த நேசமணி.. நேசமணியை தூக்கி சாப்பிடும் #Where is Mugilan.. செம ஹாட்டான டிவிட்டர்!மோடியை டம்மியாக்கவந்த நேசமணி.. நேசமணியை தூக்கி சாப்பிடும் #Where is Mugilan.. செம ஹாட்டான டிவிட்டர்!

    வலிமையான எதிர்ப்பு

    வலிமையான எதிர்ப்பு

    நாடாளுமன்ற அவையில் அதிமுக உறுப்பினர்கள் பாட்டு பாடுவது, 8 வழிச்சாலை, கீழடி, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற மாநிலத்துக்கு எதிரான திட்டங்களுக்கு வலிமையான எதிர்ப்புகளை பதிவு செய்யாதது, ஜிஎஸ்டி, நீட் போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது இதையெல்லாம் பார்த்துதான் தமிழக மக்கள் தேர்தலில் தங்கள் பதிலை தெரிவித்தார்கள்.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    இந்த நிலை மாறிஉள்ளது. அறிவார்ந்த, திறமை வாய்ந்த, எம்பிக்கள் திமுக சார்பாக ஒன்று திரண்டுள்ளார்கள். நாடாளுமன்றத்தை மொத்தமாக ஆக்கிரமித்து பாஜகவை திணற திணற கேள்வி கேட்பார்கள் என்றே நம்பலாம். ஏனென்றால் ஒவ்வொருவரும் வாய்ச்சவடால் மிக்கவர்கள், ரத்தம் கொப்பளிக்க துணிச்சலோடு தமிழக நலனை எடுத்து வைப்பர்கள். அது திருமாவளவனாக இருந்தாலும் சரி, ஜோதிமணியாக இருந்தாலும் சரி, தமிழச்சியாக இருந்தாலும் சரி!

    தண்ணீர் பிரச்சனை

    தண்ணீர் பிரச்சனை

    வெளிநடப்பு என்பது இனி நாடாளுமன்றத்தில் இவர்கள் பக்கம் இருக்க வாய்ப்பே இல்லை. இவர்களை பாஜக எந்த அளவுக்கு எதிர்கொள்ள போகிறதோ தெரியவில்லை. உதாரணத்துக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக யாரை நியமித்தாலும், அவர்களை தெறிக்க ஓடவிடும் அளவுக்கு இவர்கள் திறமைசாலிகள். காரணம், அண்டை மாநிலங்களில் தண்ணீர் பிரச்சனையால் நாம் சூழ்ந்துள்ளதே!

    ராஜ்யசபா

    ராஜ்யசபா

    அதிமுகவினரை போல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி கொட்டியோ, வழவழ கொழகொழாவென கருத்துக்களை குழப்புவர்கள் அல்ல. தமிழக நலன் சார்ந்தவற்றை ஆழமாகவும், விரிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பவர்கள். இன்னும் வைகோ ராஜ்யசபாவுக்கு போனால் கேட்கவே வேண்டாம். பழைய கர்ஜனையை திரும்பவும் நாம் கேட்க முடியும்.

    தனிநபர் மசோதா

    தனிநபர் மசோதா

    ஒருவேளை மத்திய அரசின் திட்டங்களுக்கு கட்சி ரீதியாக அல்லது வேறு காரணத்துக்காக முட்டுக்கட்டை எழுமானால், தனிநபர் மசோதா மூலம் செய்து முடிப்பார்கள். கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிறைய எம்பிக்கள் தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர். இதுவரை இப்படி தனிநபர் மசோவை தமிழகத்தில் இருந்து யாருமே கொண்டு வராதது வருத்தம்தான். ஆனால் இப்போது நாடாளுமன்றம் செல்பவர்கள் போக்குவார்கள் என்றே நம்பலாம்.

    பெரிய அரண்

    பெரிய அரண்

    எப்படியோ, பெரிய அளவில் தமிழகத்துக்கு கிடைக்க வழி செய்யாவிட்டாலும், இருக்கும் வளத்தை கொள்ளையடித்து கொண்டு போய் விடாமல், இவர்கள் அனைவருமே நமக்கு அரணாக இருப்பார்கள் என்று நம்புவோம்!

    English summary
    It is believed that VCK Thirumavalavan, Congress Jothimani, CPM Venkatesan, will deliver many welfare schemes to the Central Government for Tamil Nadu concerns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X