சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்.. லோக்சபாவை கலக்குவது எப்படி.. நாளை ஆலோசனை!

திமுக எம்பிக்கள் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நூலிழையில் ஆட்சி மாற்றத்தை தவறவிட்ட திராவிட முன்னேற்ற கழகம், நாளை தனது எம்பிக்கள் கூட்டத்தை கூட்டிஉள்ளது.

பிரச்சாரத்தின்போதெல்லாம் ஆட்சி மாற்றம் வரும் என்றும், மோடி அரசு தூக்கி எறியப்படும் என்றும் சொல்லியும் பிரச்சாரம் செய்தது திமுக.

ஆனால் இது இரண்டுக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக-வும், 9 தொகுதிகளில் அதிமுகவும் ஜெயித்துள்ளன.

திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!

கைகூடி வரவில்லை

கைகூடி வரவில்லை

எனவே, திமுக கூட்டணிக்கு ஏற்கனவே 97 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், இப்போது வெற்றி பெற்ற இந்த 13 தொகுதிகளையும் சேர்த்து, 110-ஆக பலம் கூடியுள்ளதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படும் அளவுக்கு சூழல் கைகூடி வரவில்லை. இதேதான் பாஜக அரசிலும் நடந்துள்ளது.

தமிழக நலன்

தமிழக நலன்

ஆனால் நாடாளுமன்றமே திரும்பி பார்க்கும் அளவுக்கு திமுக பலம் கூடி உள்ளது. மொத்தமாக 38 எம்பிக்களும் திரண்டு டெல்லி செல்ல போகிறார்கள். தமிழக நன்மைக்காக பலவித மாற்றங்களையும் சேர்ந்து நடத்த போகிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்! கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்!

அழைப்பு

அழைப்பு

இந்த நிலையில்தான் சென்னையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் முகஸ்டாலின் தலைமையில் நாளை கூட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிய திமுக எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இப்போதைக்கு தமிழகம் சார்பில் 38 எம்பிக்கள் திரண்டுள்ளது நிச்சயம் டெல்லியை கொஞ்சம் அசைத்து பார்க்கவே செய்யும். அந்த வகையில், தமிழகம் தற்போது எதிர்கொண்டு பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எடுத்துரைப்பது, கையாளுவது, என்பது தொடர்பான ஆலோசனைகள் நாளைய கூட்டத்தில் மேற் கொள்ளப்படலாம் என தெரிகிறது.

English summary
The meeting of DMK MPs will be held tomorrow in Chennai Anna Arivalayam under the leadership of MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X