சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுசா இருக்கே... ஸ்டாலினிடம் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் திமுக எம்.பி.க்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்.பி.க்கள் தங்களது மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுகவின் தருமபுரி தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், "ஆகஸ்டு மாத செயல்பாட்டு அறிக்கையை கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் வழங்கியபோது" என்கிற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார், இதற்கு திமுகவினர் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திமுகவில் இதுபோன்ற அறிக்கைகளை எம்.பி.க்கள் தாக்கல் செய்வது தற்போதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது என்கின்றனர்.

அதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா? பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு!அதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா? பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு!

மக்கள் நெருக்கம் அதிகரி[ப்பு

மேலும் ஒவ்வொரு தொகுதி எம்.பி.யும் தங்களது செயல்பாடுகளை தலைமையிடம் மாதந்தோறும் கொடுப்பதன் மூலம் கட்சிக்குத்தான் வலிமை சேர்க்கும். மக்களிடம் திமுகவுக்கான நெருக்கத்தை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அலுவலகங்கள் திறக்க

அலுவலகங்கள் திறக்க

ஒவ்வொரு எம்.பி.யும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளில் அலுவலகங்களைத் திறக்க வேண்டும் என்று திமுக தலைமை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் பொதுமக்கள் கேட்கும் அத்தனை அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கூறியிருக்கிறது திமுக தலைமை.

எதனடிப்படையில் அறிக்கை

எதனடிப்படையில் அறிக்கை

இதனடிப்படையில்தான் தங்களிடம் வந்த கோரிக்கை மனுக்கள் எத்தனை? என்ன என்ன மனுக்கள் வந்திருக்கின்றன? அந்த மனுக்களுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், தமது செயல்பாடுகள் குறித்த பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக கட்சித் தலைமையிடம் திமுக எம்.பி.க்கள் கொடுத்து வருகின்றனர்.

கட்சி நிர்வாகிகள் உற்சாகம்

கட்சி நிர்வாகிகள் உற்சாகம்

திமுகவின் இப்புதிய அணுகுமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுவதால் தேர்தல் காலங்களில் தங்களது பணி மிக எளிதானதாகிவிடுகிறது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

English summary
DMK MPs had submitted their monthly report to party president MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X