சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பேர் உயிருக்கும் ஏதாவது ஆச்சுன்னா.. ராமதாஸ்தான் பொறுப்பு.. முரசொலி தடாலடி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முரசொலியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இவர்களுக்கு ஏதும் ஆனால் ராமதாஸ்தான் பொறுப்பு - முரசொலி- வீடியோ

    சென்னை: முத்தரசன், எஸ்றா சற்குணம்.. இவங்க ரெண்டு பேருடைய உயிருக்கும் ஏதாவது ஆபத்து வந்தால், அதுக்கு டாக்டர் ராமதாஸ்தான் பொறுப்பு என்றும் ஜிகே மணி சிண்டு முடியும் வேலையை பார்க்க வேண்டாம் என்றும் திமுக எச்சரித்துள்ளது.

    பொன்பரப்பி விவகாரம் ஆரம்பித்ததில் இருந்தே விசிக-பாமக இடையே நிறைய கண்டனங்கள், எதிர்ப்புகள், பதிலடிகள் நடந்து வந்தன.

    இந்த விஷயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும், பேராயர் எஸ்றா சற்குணமும் கருத்து சொன்னதால் விஷயம் மேலும் வெடித்தது. இதில், திமுகவும் தலையிட ஆரம்பித்ததும் விவகாரம் வேறு எங்கெங்கோ சென்று கொண்டு பூதாகரமாகி வருகிறது.

    சொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்!சொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்!

    துரைமுருகன்

    துரைமுருகன்

    நேற்று முன்தினம் ஜிகே மணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ராமதாஸ் வன்முறையை தூண்டும் விதமாக எதுவும் பேசவில்லை என்றும், வேண்டுமானால் விவரம் அறிந்த துரைமுருகன் துணையுடன் அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

    முரசொலி

    முரசொலி

    ஜிகே மணியின் இந்த அறிக்கைக்கு இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் நீண்ட பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் இதுதான்:

    எஸ்றா சற்குணம்

    எஸ்றா சற்குணம்

    "முத்தரசனோ, எஸ்றா சற்குணமோ அப்படி பேசுகிற பெருமக்கள் இல்லை. முத்தரசன் நிஜம். அவரா துப்பாக்கி ஏந்தி வன்னிய மக்களைசுட வேண்டும் என்று பேசியிருப்பார்? இயேசுவை பின்பற்றும் எஸ்றா சற்குணம் ஒரு புரட்சி துறவி. தாழ்த்தப்பட்ட மிகவும், பிற்படுத்தப்பட்ட, மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர். அவர் எப்படி தனது மக்களையே அருவருக்கத்தவர்களாக சொல்வார்?

    மரம் வெட்டி

    மரம் வெட்டி

    ராமதாசின் கண்டன அறிக்கையின் நோக்கம் என்ன? "மரம் வெட்டி" என்பது நாடே சொன்ன விமர்சனம்தான். ராமதாசும் அது ஒரு போராட்ட முறை என்று தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது இருவருமே பேசாத ஒன்றை பேசியதாககூறி, அதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டு, தனது கட்சிக்காரர்களை அந்த இருவரை தாக்குவதற்கு சைகை செய்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.

    ஜிகே மணி

    ஜிகே மணி

    துரைமுருகன் மட்டுமே விவரம் தெரிந்தவர் என்று ஜிகே மணி சொல்லுகிறார். திமுகவில் இருப்பவர்கள் எல்லோருமே விவரம் தெரிந்தவர்கள். இதை சொல்லி சிண்டு முடியும் வேலையை ஜிகே மணி பார்க்க வேண்டாம்.

    பொறுப்பு

    பொறுப்பு

    நாங்கள் சொல்ல வருவதும், எச்சரிக்கை செய்ய விரும்புவதும் ஒன்றுதான். முத்தரசனுக்கோ, எஸ்றா சற்குணத்திற்கோ, திமுக அணியை சேர்ந்த தலைவர்களுக்கோ உயிருக்கு ஆபத்து நேருமானால் அதற்கு முழு பொறுப்பு டாக்டர் ராமதாஸ்தான்!" என்று காட்டமாக உள்ளது அந்த அறிக்கை!

    English summary
    DMK Murasoli Magazine has criticized Dr Ramadoss and his Statement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X