சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுக்குத்தான் செம பிரஷர்.. விக்கிரவாண்டி மட்டுல்ல.. நாங்குநேரியிலும் காங். ஜெயிச்சே ஆகணும்!

2 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்க வேண்டியது அவசியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக நா புகழேந்தி.. ஸ்டாலின் அறிவிப்பு-வீடியோ

    சென்னை: நடக்க போகும் 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுக ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை 2016-ல் வெற்றி பெற்றது என்றால், பாமகவின் ஓட்டும் மெச்சத்தகுந்த வகையிலேயேதான் உயர்ந்திருந்தது.

    இந்த முறை அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பல வியூகங்களை கையில் எடுத்துள்ளது. ஒரு பக்கம் அமைச்சர் சிவி சண்முகத்தின் உள்ளடி வேலைகள், மாஸ்டர் பிளான்கள் ஒர்க் அவுட் ஆக நிறைய வாய்ப்பு உள்ளது.

    லட்சுமணன்

    லட்சுமணன்

    தன்னுடைய சொந்த அண்ணனை வேட்பாளராக நிறுத்தினாலும்சரி, அல்லது முன்னாள் அமைச்சர் லட்சுமணனை நிறுத்தினாலும் சரி.. கண்டிப்பாக சிவி சண்முகம் தொகுதியின் வெற்றிக்கு வித்திடுவார் என்பதே அதிமுகவின் பலம். இன்னொரு பக்கம், கூட்டணியில் பாமக உள்ளதால், இந்த வெற்றி இன்னும் எளிதாகும் என்று அதிமுக கணக்கு போடுகிறது.

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டி

    மற்றொரு பக்கம் அமமுக இந்த முறை போட்டியிடாததால், போன எம்பி தேர்தலை போலவே இந்த முறையும், அமமுகவின் ஓட்டுக்கள் அப்படியே அதிமுகவுக்கு விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அதிமுகவின் வெற்றி விக்கிரவாண்டியில் எளிது என்பது போலதான் கணிக்கப்பட்டு வருகிறது. இதனால் நெருக்கடி யாருக்கு என்றால் திமுகவுக்குதான்.

    உதயநிதி

    உதயநிதி

    இவ்வளவையும் சமாளித்து விக்கிரவாண்டியை திமுக கைப்பற்றுமா என தெரியவில்லை. ஒருவேளை உதயநிதியை அங்கு நிறுத்தினால், வெற்றி பெறுவது எளிது என்று கணக்கு போடுகிறதா என்றும் தெளிவாகவில்லை. அதே சமயம், உதயநிதியை வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில், கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் எழுந்தாலும் அது திமுகவுக்குதான் பாதகமாகிவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

    நிலைப்பாடு

    நிலைப்பாடு

    நாங்குநேரியை அடம் பிடித்து காங்கிரஸ் வாங்கி உள்ளது என்றாலும், முழு ஒத்துழைப்பை திமுக தருமா அல்லது அதிமுகவின் தேனி பார்முலாவை இங்கு திமுகவும் கையில் எடுக்க முன்வருமா என்பது சந்தேகம்தான். இதில் திமுகவுக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இந்த இரு தொகுதிகளுமே திமுகவின் வசம் ஏற்கனவே இருந்தன என்பது ஒன்றுதான். இதைதவிர மற்ற விஷயங்களில் நிலைப்பாடு எப்படி இருக்கு போகிறது என்பது இனிதான் தெரியவரும்.

    கட்டாயம்

    கட்டாயம்

    ஏனென்றால் ஒன்றில் தோற்றாலும் அது திமுகவுக்கு சறுக்கு என்பதுபோலதான் ஆகிவிடும். அதேபோல, திமுக வசம் இருக்கும் இந்த தொகுதிகளில் ஒன்றில் ஜெயித்தாலும், அது அதிமுகவுக்கு மகுடம் என்பதுபோலதான் ஆகிவிடும். எப்படி இருந்தாலும், இந்த 2 தொகுதிகளின் வெற்றிதான் உள்ளாட்சி தேர்தலின் வெற்றிக்கு அடிகோலாக பார்க்கப்படுகிறது.

    English summary
    The DMK is said to be forced to win the by-election in Nanguneri and Vikkiravandi Constitutions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X