சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஎம்-க்கு சிஏஏ பத்தி தெரியாது.. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்ன்னு சொல்றவரு: நாஞ்சில் சம்பத்

Google Oneindia Tamil News

சென்னை: "நம்ம சிஎம்க்கு சிஏஏ என்னன்னு தெரியாது.. சூட்சுமமும் தெரியாது.. ஆனால் உண்மைஎன்ன? அந்த ரோஹியாங்களுக்கு இடம் தர வேண்டும் என்பதற்காகவே மியான்மரை சேர்க்கவில்லை.. ஆப்கானிஸ்தானை ஏன் சேர்த்தார்கள்? அது என்ன இந்தியாவின் அண்டை நாடா? பிரிட்டிஷ் இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் இருந்ததா? அப்பறம் ஏன் சேர்த்தே.. ஏன்னா, அவங்க வந்ததே அந்த வழியாகத்தான்.. எந்த வழி.. அந்த வழி.. புரியுதா.. இதுதான் சிஏஏ" என்று நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி நடத்தி வருகிறது. இதில் அக்கட்சியின் உதயநிதி ஸ்டாலின் மிக தீவிரமான ஈடுபாட்டில் இறங்கி வருகிறார்.

தொடர்ந்து சிஏஏவுக்கு எதிரான திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது.. பொதுமக்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் என அனைவரும் திரளாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு வருகின்றனர்.

முதல்வர்

முதல்வர்

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் சிஏஏ குறித்த கேள்வி கேட்கப்பட்டது. "சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்று சிஎம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாரே" என்று கேட்டனர்.

வீடியோ

வீடியோ

இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், "நம்ம சிஎம்க்கு சிஏஏ என்னன்னு தெரியாது.. இதனுடைய சூட்சுமமும் இவர்களுக்கு தெரியாது.. ஒரு தேசிய பதிவேடு என்று தொடங்கி 19 லட்சம் பேரை நாடு அற்றவர்களாக இன்னைக்கு மாற்றிவிட்டார்கள். சிஏஏ-வால் பாகிஸ்தானில் இருக்கிற அகமதியாக்கள் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துக்காகவே போராடுகிறார்கள்.

ரோஹிங்கியாக்கள்

ரோஹிங்கியாக்கள்

கிறிஸ்தவர்கள், இந்துக்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் அகமதியாக்களுக்கு கிடைக்கவில்லை.. அவர்களுக்கு இடம் கொடுப்பார்களா? பாகிஸ்தானில் இருக்கிற போரோ முஸ்லீம்கள், பாகிஸ்தானில் இருக்கிற ஷியா முஸ்லீம்கள், அவர்களுக்கு இடம் கொடுப்பார்களா? 40 ஆயிரம் பேர் எற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள்.. அவங்களுக்கு பெயர் ரோஹிங்கியாக்கள்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

அந்த ரோஹியாங்களுக்கு இடம் தர வேண்டும் என்பதற்காகவே மியான்மரை சேர்க்கவில்லை.. ஆப்கானிஸ்தானை ஏன் சேர்த்தே? அது என்ன இந்தியாவின் அண்டை நாடா? பிரிட்டிஷ் இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் இருந்ததா? அப்பறம் ஏன் சேர்த்தே.. அவங்க வந்ததே அந்த வழியாகத்தான்.. எந்த வழி.. அந்த வழி.. புரியுதா.. இதுதான் சிஏஏ.

உதயநிதி

உதயநிதி

இது முதலமைச்சருக்கு தெரியுமா? கம்பராமாணயத்தை எழுதினது சேக்கிழாருன்னு சொல்றாரு? கம்ப ராமாயணத்திலேயே கம்பர் இருக்காரே.. சேக்கிழார் எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்ன தெரியும் பாவம்.. "என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ பதிவினைதான் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் எடுத்து பதிவிட்டுள்ளார். "நீட்-திணிங்க, CAA-மத அடிப்படையில் மக்களை பிரிங்க, எங்க தேவை கமிஷன் எனும் அடிமை அதிமுகவை பயன்படுத்தி வெறுப்பரசியலின் கோர முகம் காட்டுகிறது பாஜக" என்றும் விமர்சித்துள்ளார்.

English summary
dmk nanjil sambath says about caa and criticized cm edapadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X