சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு

விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெறுவது கட்டாயமாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Dravida Munnetra Kazhagam Flag History | Oneindia Tamil

    சென்னை: மற்ற தொகுதிகளைவிடவும் மிக முக்கியமானதாக விக்கிரவாண்டியைப் பார்க்கிறார் ஸ்டாலின். இதற்கு என்ன காரணம்? அதிமுகவுக்கு ஆதரவாக பாமக பக்கபலமாக இருந்தும்.. திமுக விக்கிரவாண்டியில் இவ்வளவு முனைப்பு காட்டி வர என்ன காரணம்?

    இதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக்கை கூட இங்கு சொல்ல வேண்டி உள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலம்.. காங்கிரஸ் கட்சியால் வன்னியர் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. இதனை எதிர்க்கவே உருவானதுதான் வன்னியர் குல சத்திரியர் சங்கம். எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்தான் தலைவர்.. ஏ.கோவிந்தசாமி இதன் செயலாளர்.

    1949-ல் மாவட்ட மன்ற தேர்தல் நடைபெற்றதில் ராமசாமி படையாட்சி வெற்றியும் பெற்றார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்தும், வன்னியர்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளாமல் போய்விட்டது. இதனால் காங்கிரஸார் தங்களை புறக்கணித்த ஆத்திரத்தில் இருந்தனர் வன்னியர் சமூக மக்கள்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணைசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

    உழைப்பாளர் கட்சி

    உழைப்பாளர் கட்சி

    அப்போதுதான் 1952-ம் ஆண்டு தேர்தல் நடந்த சமயம் அது. வட ஆற்காடு வன்னியர்கள் காமன்வீல் கட்சி என்ற பெயரிலும், தென்னாற்காடு வன்னியர்கள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற பெயரிலும் போட்டியிட்டு மெகா வெற்றி பெற்றனர்.

    ஏ.கோவிந்தசாமி

    ஏ.கோவிந்தசாமி

    ஆனால், இந்த தேர்தலுக்கு பிறகு வன்னியர்கள் காங்கிரஸை மன்னித்து அதன் பக்கம் சாய்ந்தனர். இப்படி துரோகம் இழைத்தவர்களுக்கு திடுதிப்பென தனது சமூகத்தினர் ஆதரவு தந்தது ஏ.கோவிந்தசாமிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

    உதயசூரியன்

    உதயசூரியன்

    இதில், காங்கிரஸ் தரப்பில் என்னென்னவோ சமாதானம் செய்து பார்த்தும் கோவிந்தசாமியிடம் ஒன்றும் மசியவில்லை. இதையடுத்து திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கினார் கோவிந்தசாமி. உதயசூரியன் சின்னத்தில் சுயேச்சையாகவும் போட்டியிட்டார் வெற்றியும் பெற்றார். அதாவது 1952-57ம் ஆண்டில் திமுக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் கோவிந்தசாமி மட்டும்தான்.

    பொறுப்பாளர்

    பொறுப்பாளர்

    1953-ல் காங்கிரசுக்கு எதிரான திமுக நடத்திய போராட்டத்தில் எல்லா கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். சிறையும் சென்றனர்.. அந்த சமயத்தில், திமுகவுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தது கோவிந்தசாமி மட்டும்தான். போராட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்கள் சிறை சென்றுவிட்டதால், திமுகவின் தலைமை நிலைய பொறுப்பாளராக கோவிந்தசாமி நியமனம் செய்யப்பட்டார்.

    அறிஞர் அண்ணா

    அறிஞர் அண்ணா

    இவரை நியமனம் செய்தது, அறிஞர் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், ஈவெகி சம்பத், என்வி நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள்தான். இதற்கான கையொப்பமும் 1953-செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடந்தது. திமுக தலைவர்கள் எல்லாருமே சிறைக்குள் இருந்தாலும், கட்சியை அற்புதமாகவும், கருத்தாகவும், கட்டுக்கோப்பாகவும் நடத்தினார் கோவிந்தசாமி.

    வன்னியர்கள்

    வன்னியர்கள்

    இதன்பிறகுதான் அதாவது 1954-ல் உழவர் கட்சி என்ற கட்சியை தோற்றுவித்தார். அந்த சமயத்தில் 1954-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தை வைத்துதான் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கோவிந்தசாமியின் வெற்றியை கண்டு காங்கிரஸ் பக்கம் சென்ற ஏராளமான வன்னியர்கள் திமுக பக்கம் வர ஆரம்பித்தனர். இதன்பிறகு ஒருகட்டத்தில் திமுக தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்தபோது, அந்த கட்சிக்கு என்று ஒரு சின்னம் இல்லாமல் இருந்தது.

    திமுக

    திமுக

    அப்போதுதான் தான் உருவாக்கி வைத்திருந்த.. பலமுறை வெற்றி பெற காரணமாக இருந்த உதயசூரியன் சின்னத்தை திமுகவுக்கு அளித்தார் கோவிந்தசாமி. உதயசூரியன் சின்னத்தை பெற்றுக் கொண்ட திமுக, 1957-ல் தேர்தலை சந்தித்தது. 13 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் நிறைந்த தொகுதி ஆகும். இதற்கு காரணம் நிச்சயம் கோவிந்தசாமியேதான். 1962 ஆகட்டும், 1967 ஆகட்டும்.. அந்த சமயத்தில் திமுக பெருமளவு தொகுதிகளை கைப்பற்ற காரணமே வன்னியர்களின் ஆதரவால்தான்.

    உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    இப்படி திமுகவின் பல வெற்றிக்கு காரணமாக இருந்த கோவிந்தசாமி, 1969-ம் ஆண்டு அமைச்சராக இருக்கும்போதே உயிரிழந்தார். கட்சிக்கு என்ற அடையாளம் இன்றுவரை இருக்க காரணமே கோவிந்தசாமிதான். அதற்காகதான் மணிமண்டபம் கட்டவும் திமுக முடிவு செய்துள்ளது. இன்று திமுகவின் அடையாளமாக திகழும் இந்த சின்னத்தை தந்த விக்கிரவாண்டியை இந்த இடைத்தேர்தலில் திமுக அவ்வளவு சீக்கிரம் விட்டு தராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பாமக

    பாமக

    அன்று ஏராளமான வன்னியர்களை திமுகவில் கோவிந்தசாமி இணைத்தாலும், பாமக உதயமான பிறகு, வன்னியர்களின் ஆதரவு திமுகவுக்கு பெருவாரியாக மாறிப் போனது. பாமக வந்த பிறகு விக்கிரவாண்டியின் நிலவரம் வேறு மாதிரியாகப் போய்விட்டது என்பது உண்மைதான். அதற்காகத்தான் திமுக வேட்பாளர் புகழேந்தியை சட்டென தேர்வு செய்து ஜெயா பாணியில் கொஞ்சமும் யோசிக்காமல் அறிவித்தது திமுக.

    நெருக்கம்

    நெருக்கம்

    தீவிர கட்சி பணியாற்றியவர் புகழேந்தி... நிறைய போராட்டங்களை முன்னெடுத்தவர்.. பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர்.. ஏற்கெனவே திமுக வெற்றி பெற்றிருந்த இந்தத் தொகுதியில் இந்த முறை அதிமுகவிடம் பறிகொடுத்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் களத்தில் இறங்கி உள்ளது. என்னதான் அதிமுகவுக்கு பாமக ஆதரவு இருந்தாலும், திமுகவுக்கு என்று ஒரு மாஸ்.. உதயசூரியனுக்கு என்று ஒரு வரலாறு.. பெற்று தந்தது இந்த விக்கிரவாண்டிதான்! அதனால் விக்கிரவாண்டி மீண்டும் திமுக வசமே என்ற நம்பிக்கை திரும்பவும் துளிர்த்துள்ளது.

    English summary
    DMK needs to win in vikkiravandi by election. Because it was this constituency that got the party symbol
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X