சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிர்பார்த்த இடங்கள் தரவில்லை- திருமாவளவன் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த வேலூர்மாவட்டம் காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் திருமாவளவன்.

தற்கொலை செய்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தினார் திருமாவளவன்.

ஐய்யோ.. செப்டம்பரில் சென்னையை சுற்றி செக்க செவேல் தக்காளிகள்.. இன்று இரவு தரமான சம்பவம்.. வெதர்மேன்ஐய்யோ.. செப்டம்பரில் சென்னையை சுற்றி செக்க செவேல் தக்காளிகள்.. இன்று இரவு தரமான சம்பவம்.. வெதர்மேன்

மைனஸ் மார்க்

மைனஸ் மார்க்

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது. காட்பாடி மாணவி சௌந்தர்யா தேர்வில் தோல்வி அடைவோம் என தெரிய வந்ததால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். பயிற்சிக்கு சென்று பயின்ற, மாணவி தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனைக்குரியது.

தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர்

மாணவியை நீட் காவு கொடுத்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விரைந்து குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசு குடியரசு தலைவர் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும்.

 இடைவெளி எங்கே வருகிறது

இடைவெளி எங்கே வருகிறது

ஏற்கனவே அதிமுக ஆட்சியிலும் மசோதா கிடப்பில் போடப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புற மாணவர்களுக்குமான இடைவெளி.. தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழிமாணவர்கள் என்ற முரண்பாடு.. பயிற்சிக்கு செல்லும் மாணவர்கள், செல்லாத மாணவர்கள்.. இப்படிபட்ட இடைவெளிகளால் தான் நீட் தேர்வில் பிரச்சணை ஏற்படுகிறது.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போடமுடியவில்லை. சிறப்பு விதிவிலக்காக, நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் சமூக நீதி மாநாடு நடத்தி முதல்வர் பங்கேற்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதற்கெல்லாம் இடம் அளிக்காத வகையில் குடியரசு தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் நிதி அளிக்க வேண்டும். மாநில அரசின் சட்டத்தை குடியரசு தலைவர் அங்கீகரிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளான திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஒருமித்த கருத்துகளை சொல்ல வேண்டும்.

எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை

எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை


திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்க வேண்டும். இவைகளை அளவுகோலாக கொண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது. எதிர்பார்த்த அளவு இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது. தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என கூறினார்.

English summary
Thol.Thirumavalavan has said that the DMK did not give the expected number of seats in the local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X