சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சியை பிடிக்க திமுக காட்டும் வேகம்.. எடப்பாடி நினைக்காத இடத்தில் எல்லாம் லாக் வைக்கும் ஸ்டாலின்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக மிக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு ஆறுதலைத் தரும் எடப்பாடியின் தகுதி நீக்க கணக்கு

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக மிக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளின்படி பார்த்தால் திமுகவின் கையே தற்போது வரை ஓங்கி இருக்கிறது.

    அதிமுகவின் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக கடந்த 1 வருடமாகவே முயன்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். நாம் எதுவும் செய்ய வேண்டாம் டிடிவி தினகரன் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றுதான் திமுக இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டு இருந்தது.

    ஆனால் டிடிவி தினகரன் எவ்வளவு முயன்றும் அவரால் அதிமுக ஆட்சியை அகற்ற முடியவில்லை. இதனால் இத்தனை நாட்கள் பூ பாதையில் சென்று கொண்டு இருந்த திமுக தற்போது சிங்கப் பாதைக்கு மாறி இருக்கிறது.

    டிடிவி தினகரனுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதா?... தமிழிசைக்கு கனிமொழி தந்த பதில் இதுதான் டிடிவி தினகரனுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதா?... தமிழிசைக்கு கனிமொழி தந்த பதில் இதுதான்

    அதிமுகவின் திட்டம்

    அதிமுகவின் திட்டம்

    இந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின் அதிமுக இரண்டு விதமான திட்டங்களை வைத்துள்ளது. முதல் விஷயம் எப்படியாவது 8 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைப்பது. இல்லையென்றால் எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது. இதற்காகத்தான் 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    ஆனால் திமுக

    ஆனால் திமுக

    ஆனால் திமுக இதற்கு ஏற்கனவே முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அதன்படி திமுக தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதில் வாக்கெடுப்பு நடக்கும் வரை, சபாநாயகர் எந்த ஒரு எம்எல்ஏவையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது.

    இன்னொரு அதிரடி

    இன்னொரு அதிரடி

    இந்த சட்டத்தை திமுக கையில் எடுக்கும் என்று அதிமுக கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த அதிரடியை திமுக கையில் எடுத்துள்ளது. அதன்படி 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்ற படி ஏறி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்துள்ளது. திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

    ஏன் அவசரம்

    ஏன் அவசரம்

    அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அந்த வழக்கு நீண்ட நாட்கள் நடக்கும். இதனால் அந்த சம்பவம் நடக்கும் முன்பே வழக்கு தொடுத்து சபாநாயகரை லாக் செய்யவே திமுக இவ்வளவு வேகமாக வழக்கு தொடுத்து இருக்கிறது. இப்படி செய்தால், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முன்பே புதிய சபாநாயகர் பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது. நீதிமன்றம் இதற்காக உத்தரவு பிறப்பிக்க கூட வாய்ப்புள்ளது.

    அதிமுக ஷாக்

    அதிமுக ஷாக்

    எங்கள் எம்எல்ஏக்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், உங்களுக்கு என்ன என்று முதல்வர் பழனிச்சாமியே சொல்லும் அளவிற்கு திமுக மிக வேகமாக செயல்படுகிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அதிமுக பெரிய அதிர்ச்சியில் இருக்கிறது. இதற்கு ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு எப்படி கவுன்டர் கொடுக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    DMK on supersonic mode to remove AIADMK ruling Tamilnadu with the help of few Law Minds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X