சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலை ஒரு நடிகராக மட்டும் பார்க்கும் திமுக... பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பிய ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டையில் கமலின் பெயருக்கு கீழ் நடிகர் என்று மட்டுமே உள்ளது.

ஒரு அரசியல் கட்சியை தொடங்கி இரண்டாண்டுகளாக நடத்தி வரும் கமல் அதற்கு தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் கமலை ஒரு நடிகர் என்ற கண்னோட்டத்தில் மட்டுமே திமுக பார்ப்பது தெளிவாகியுள்ளது.

ஆண்டுதோறும் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து அட்டை

வாழ்த்து அட்டை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். அந்த அட்டையில் இதயப்பூர்வமான முறையில் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவிவித்துக்கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்பு கமல் அலுவலகத்துக்கு சென்று சேர்ந்தது.

நடிகர்

நடிகர்

கமல் கட்சி தொடங்கியது முதல் ஊடகங்களிலும் சரி, அரசியல் கட்சித் தலைவர்களும் சரி அவரை நடிகர் என்று அழைப்பதைக் குறைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் என்றே உச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கமல், நடிகர், எல்டாம்ஸ் சாலை, சென்னை என்று மட்டும் அண்ணா அறிவாலய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை கமல் இன்னும் படிக்கவில்லை என்றும், மேலும் அவரை நடிகர் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் திமுக பார்ப்பது தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும் கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்ட நிர்வாகி ஒருவர்.

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை ஆண்டுதோறும் தனது நண்பர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், என பல தரப்பினருக்கும் பல வருடங்களாக பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
dmk only sees mnm president Kamal as an actor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X