சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீலா ராஜேஷ் கணவர் நியமனத்துக்கு துரைமுருகன் எதிர்ப்பு.. காவல்துறையில் பனிப்போர் வரும் என எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதிக்கு போட்டியாக பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமையால் நடக்கும் கூத்துகளைப் போல், 'டி.ஜி.பி.', 'ஸ்பெஷல் டி.ஜி.பி.' என்ற முதலமைச்சர் பழனிசாமியின் விபரீத விளையாட்டு, தமிழகக் காவல்துறையை அடியோடு நாசப்படுத்திவிடும் என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பெற்ற மகனை அடியாட்களுடன் கணவன் வீட்டுக்கு கடத்த முயன்றதாக மனைவி மீது புகார்.. கோவையில் பரபரப்பு பெற்ற மகனை அடியாட்களுடன் கணவன் வீட்டுக்கு கடத்த முயன்றதாக மனைவி மீது புகார்.. கோவையில் பரபரப்பு

 அதிகாரப் போட்டி

அதிகாரப் போட்டி

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக - அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக திரு. திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் - தேர்தல் காலப் பணிகளில் "எடப்பாடிக்கு" எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக - போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

கொள்ளை

கொள்ளை

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு - குறிப்பாக சட்டம் - ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள் - அதுவும் கூலிப்படைகளை வைத்து நடத்தப்படும் கொலைகள் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

பாதுகாப்பற்ற

பாதுகாப்பற்ற

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாகி - சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போன்ற பொது அமைதிச் சீர்குலைவு என, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்களுக்குச் சற்றும் பாதுகாப்பாற்ற மாநிலமாக மாறிவிட்டது.

 காவல்துறை

காவல்துறை

திரு. ராஜேஷ்தாஸ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால் அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்குப் போட்டியாக நியமிப்பதும் - அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு ரூமில் அமர்த்தி வைப்பதும் முதலமைச்சருக்கு அழகல்ல. தமிழகக் காவல்துறையைச் சீரழிக்கும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

என்ன பொறுப்பு?

என்ன பொறுப்பு?

இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு? தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டி.ஜி.பி.யாக இருக்கும் "ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு"கட்டுப்பட வேண்டுமா?

 துரைமுருகன் சாடல்

துரைமுருகன் சாடல்

தலைமை அலுவலகத்தில் "பனிப்போர்" துவங்கினால், அது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களிலும் எதிரொலிக்கும் ; காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பிரதிபலிக்கும். தமிழகக் காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் அறவே தகர்த்து எறியப்பட்டு விடும்.

English summary
DMK opposes promotion of Beela rajesh husband Rajesh Das
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X