சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஸ்வைப் 50".. எகிறும் எதிர்பார்ப்பில் ஸ்டாலின்.. கம்மென்று இருக்கும் எடப்பாடியார்.. தடதட யூகங்கள்

திமுக அல்லது அதிமுக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகதான் வெற்றி பெறும் என்ற கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட 50 தொகுதிகள் பற்றின பேச்சு பலமாக எழுந்து வருகிறது.. அதென்ன 50 தொகுதிகள்?

நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழலே ஏற்பட்டு வருகிறது.. எனினும் இந்த முறை பதிவான வாக்குகள் யாருக்கு சாதகமாக டிரான்ஸ்பர் ஆகி உள்ளன என்பது குறித்த சலசலப்புகளும் நடந்து வருகிறது.

இதில் திமுக தரப்பை பொறுத்தவரை, சில தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தவைதான்.. ஐபேக் டீம் 3 வித ரிப்போர்ட்களை எடுத்ததாக சொல்லப்ப்பட்டது.

 3 ரிப்போர்ட்

3 ரிப்போர்ட்

ஒன்று, தேர்தலுக்கு முன்பு, மற்றொன்று தேர்தல் தினத்தன்று, இன்னொன்று தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவு சதவீத கணிப்புகள்.. இவைகளை வைத்து, எடுக்கப்பட்ட 3 ரிப்போர்ட்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சர்வேயை எடுத்து தந்துள்ளது.. அவைகளில் 180+ திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஐபேக் தவிர, பிற நிறுவனங்கள் எடுத்த சர்வேயிலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான எண்ணிக்கைதான் தரப்பட்டுள்ளது.

திமுக

திமுக

அந்த வகையில்தான் திமுகதான் வெற்றி பெறும் என்ற யூகமும் பலமாக எழுந்து வருகிறது.. 180 என்பது உறுதியாகிவிட்டதால், மிச்சமுள்ள 50 தொகுதிகள் பற்றின ஆர்வத்தில்தான் திமுக உள்ளதாக தெரிகிறது.. அந்த 50 தொகுதிகளின் வாக்குகள் யாருக்கு சாதகமாகி உள்ளது? யாருக்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது என்ற கணக்கினை அறியவே, திமுகவின் மேலிட தலைவர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.

ராமதாஸ்

ராமதாஸ்

வடமாட்டங்களை பொறுத்தவரை, 12 முதல் 18 இடங்கள் வரை கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தரப்பு உறுதியாக நம்பினாலும் நிஜ நிலவரமும், டிரான்ஸ்பர் ஆன வாக்குப்பதிவையும் வைத்து பார்க்கும்போது, அப்படி இல்லை என்கிறார்கள்.. அதேபோல, தென்மண்டலங்களிலும் தினகரனின் சரவெடி வியூகம் அதிமுகவுக்கு மைனஸை தந்து, திமுகவை தூக்கிவிட்டுவிடும் என்கிறார்கள்.. கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்பதால், அந்த 50 இடங்களும் இந்த மண்டலத்துக்குள் அடைபடுமோ என்ற ஐயமும் திமுகவுக்கு எழுந்துள்ளது..

அமைதி

அமைதி

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி தரப்பு அமைதியாகவே அனைத்தையும் அணுகி வருகிறாராம்.. யார் எந்த பக்கம் இருந்தும் ரிப்போர்ட் தந்தாலும், நிலவரத்தை சொன்னாலும், யூகத்தை சொன்னாலும், கணிப்பை சொன்னாலும், அவ்வளவையும் காது கொடுத்து கேட்டு கொள்கிறாராம்.. மாறாக எந்தவிதமான நம்பிக்கையிழந்த வார்த்தைகளையும் உதிர்க்கவில்லையாம்... அதிமுக மட்டுமல்ல, திமுக தரப்பில் வெளியாகும் ரிப்போர்ட்களை பற்றியும் அமைதியாகவே கவனித்து வருகிறாராம் எடப்பாடியார்.

ஸ்வைப்

ஸ்வைப்

இப்போது விஷயம் என்னவென்றால், அந்த 50 தொகுதிகள் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்பதுதான்.. யார் ஸ்வைப் செய்ய போகிறார்கள்? அடுத்து வரும் ஆட்சி மெஜாரிட்டியுடன் அமைய போகிறதா? அல்லது தொங்கு ஏற்பட்டுவிடும் சூழல் ஏற்படுமா? என்பதுதான்.. ரிசல்ட் வந்தால்தான் எல்லாமே தெரியவரும்.. பார்ப்போம்..

English summary
DMK or ADMK: Will the next Government be with a majority
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X