• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல.." எகிறி எகிறி முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்!!

|
  முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்!!-வீடியோ

  சென்னை: "மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல.." என்று சொல்லி கொண்டே திமுக பிரமுகர், முதியவர் ஒருவரை எட்டி எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  சென்னை மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக உள்ளார். மாதவரம் பகுதியில் இவர் பவர்ஃபுல் அரசியல்வாதியாக வலம் வருபவர்.

  அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரிகளை மிரட்டியும், தொழில் அதிபர்களை மிரட்டியும் வருபவர் என்று கூறப்படுகிறது.

  ஆயுத பூஜை

  ஆயுத பூஜை

  இந்நிலையில் ரெட்டை ஏரி லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீவாரி என்ற சூப்பர் மார்கெட் புதிதாக போன மாசம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த மார்க்கெட்டில் ஆயுத பூஜை போடப்பட்டது. பூஜை அன்று ஃபுல் போதையில் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் தசரதன்.

  முதியவர்

  முதியவர்

  அங்கே கடை வைத்திருந்தவர்களிடம் வலிய சண்டைக்கு போனார். "எப்படி நீ கடையை திறந்தே.. என்னை கேக்காம எப்படி கடையை திறந்தேன்னு கேட்டேன்.. எனக்கு தர வேண்டியதை முதல்ல கொடு" என்று தகராறில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த கடையின் அருகே வசித்து வந்த முதியவர் முத்துவும், அவரது மனைவியும் தடுக்க முயன்றனர்.

  தசரதன்

  தசரதன்

  இதை கண்டதும் அந்த கடை பகுதியில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதி, தசரதனை சமாதானம் செய்ய போனார்கள். ஆனால், அவர்களை காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையான வார்த்தைகளால் திட்டினார் தசரதன். ஒரு கட்டத்தில் அவர்களை காலாலேயே எட்டி உதைத்துவிட்டார். இதை அந்த பெரியவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

  தப்பு பண்ணல

  தப்பு பண்ணல

  அதனால் சத்தமாக கத்தவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தசரதனை மடக்கி பிடித்தனர். அப்போதும், ஒரு நபர் தசரதனை இழுத்து பிடித்து நிற்க வைத்து சமாதானம் செய்தார். ஆனாலும் தசரதன் அடங்கவில்லை, "மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல.. என்னை ஏன் எல்லாரும் அடிக்க வர்றாங்க" என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார். இறுதியில், புழல் ஸ்டேஷனில் பொதுமக்கள் தசரதன் மீது புகார் தந்தனர்.

  கைது

  கைது

  இப்படித்தான், மசாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, பிரியாணி கடையை அடித்து நொறுக்குவது என்று வன்முறைகள் அதிகமாக ஆரம்பித்தது. போன மாதம், முத்துவேல் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ஏமாற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே போல 2 நாளைக்கு முன்னாடி, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்எஸ்.பாண்டியன் என்பவர் போக்சோவில் கைதானார்.

  கடிவாளம்

  கடிவாளம்

  இப்படி தொடர்ச்சியான சர்ச்சை, பிரச்சனையில் திமுக பிரமுகர்கள் ஈடுபட்டு வருவது அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது தசரதன் அந்த பெரியவரை எட்டி உதைத்து தாக்கும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கட்சி தலைமை இதில் உடனடியாக தலையிட்டு, பெயரை கெடுக்கும் விதத்தில் யார் இப்படி அராஜகத்தில் நடந்தாலும், அவர்களை களையெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  dmk person attacked elder person in retteri market near Chennai and this shocking video goes viral now
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X