சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து மனுத் தாக்கல்... உச்சநீதிமன்றத்தை நாடிய திமுக..!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 புதிய வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது மத்திய அரசு. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வரும் சூழலில் அந்த சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.

Dmk Petition against new agricultural laws

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020, விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் - 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இந்த சட்டங்களால் என்னென்ன பாதகங்கள் ஏற்படும் என பட்டியிலிட்டுள்ளார் திருச்சி சிவா எம்.பி.

அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!

இதனிடையே இந்த புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது வழக்காக திமுக மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கான சட்ட நுணுக்கங்களை திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கவனித்து வருகிறார்.

Dmk Petition against new agricultural laws

புதிய வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தின. இதேபோல் பஞ்சாப்பில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை கண்டித்து இன்னும் போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Dmk Petition against new agricultural laws
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X