சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெல்கம் வேல்முருகன்... வன்னிய வாக்குகளை அள்ள திமுக போட்ட செம பிளான்..!

Google Oneindia Tamil News

சென்னை: அப்பாடா.. கடைசி முயற்சியாக இதையாவது திமுக எடுத்ததே என்று கட்சியினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். எப்படியோ பேசி வேல்முருகனை பாதி கட்சிக்குள்ளே கொண்டுவந்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!

ரொம்பவும் ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் காய் நகர்த்துகிறோம் என்ற பெயரில் திமுக, கூட்டணி விஷயத்தில் மொத்தமாக சொதப்பல் செய்துவிட்டது!

எங்க, யார்கூட கூட்டணி பேசுகிறார்கள் என்ற விஷயமே ரொம்ப நாளைக்கு கமுக்கமாக இருந்தது. அதனால் பெரிய அளவில் ஏதோ கூட்டணி திட்டம் இருக்கும்போல என்றுதான் நினைக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால், தேமுதிகவும் இல்லாமல், பாமகவும் இல்லாமல் திமுக கூட்டணி அமைந்தது!

AMMK: மொத்தம் 24 வேட்பாளர்கள்.. அதில் முத்து போல 3 பெண்கள்! AMMK: மொத்தம் 24 வேட்பாளர்கள்.. அதில் முத்து போல 3 பெண்கள்!

விமர்சனம்

விமர்சனம்

தேமுதிக, பாமக இரண்டில் ஒன்று கூட இல்லாதது திமுகவின் படுதோல்வி என்றும், சாமர்த்தியம் இல்லை என்றும்தான் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை பக்காவாகவும், இன்னொரு கட்சியை, கெஞ்சவிட்டு படாத பாடு படுத்தியும் இணைத்து கொண்டு "மெகா கூட்டணி " என்ற பெயரை வாங்கிகொண்டது அதிமுக!

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

இதனால் தேமுதிக, பாமக செல்வாக்கு உள்ள வட மாவட்டங்களின் ஆதரவை திமுக முற்றிலும் இழக்க வேண்டி வந்தது. இந்த இரு கட்சி தொண்டர்களின் எதிர்ப்பையும் வரும் தேர்தலில் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளானது. அதனால்தான் வன்னியர்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிடக்கூடாது என்று, வடதமிழக தனி தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் திமுக போட்டியிடவும் முடிவு செய்தது.

வேல்முருகன்

வேல்முருகன்

எனினும் தென் தமிழகத்தில் அழகிரி உறுமிக் கொண்டிருக்க, வட தமிழகத்திலும் நிலைமை மோசம் என்பதை திமுக உணர்ந்துள்ளது போலும். அதனால்தான் கடைசி முயற்சியாக வேல்முருகனிடம் பேசியுள்ளதாக தெரிகிறது. இப்போது வேல்முருகனும் திமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அப்படியென்றால், வட மாவட்ட வாக்குகளை இனி வேல்முருகன் பார்த்து கொள்வார் என்று அர்த்தமாகிறது.

சாதகமாகிறது

சாதகமாகிறது

வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக விழும் எல்லா முயற்சிகளையும் இனி வேல்முருகன் இறங்கி எடுப்பார் என்றே நம்பப்படுகிறது. வட மாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது. மற்றொரு பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருக்கிறார்கள். இவை அத்தனையையும் திமுகவுக்கு வாக்குகளாக மாற்ற வேல்முருகன் களம் இறங்குவார் என தெரிகிறது. இதுஎல்லாவற்றிற்கும் மேலாக திருமாவளவனுக்கும், வேல்முருகனுக்கும் நல்ல இணக்கமான நட்பு உள்ளதும் இப்போது சாதகமாக அமைந்திருக்கிறது.

பாமக பெல்ட்

பாமக பெல்ட்

சுருக்கமாக சொல்ல போனால், பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை வைத்து வாக்குகளை அள்ளப் பார்க்கிறது திமுக! எப்படியோ கடைசி நேரத்தில் இந்த முயற்சியாவது திமுக எடுத்திருக்கிறதே.. அந்த வகையில் சந்தோஷம் + ஸ்டாலினுக்கு ஒரு சபாஷ்!

English summary
DMK Leader MK Stalin is planning to get Vanniyars's votes through Tamilaga Vazhvurimai Katchi Velmurugan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X