சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த 18 பேர் முக்கியம்.. ரகசியமாக காய் நகர்த்தும் திமுக.. இடைத்தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் பிளான்!

தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய திட்டம் ஒன்றில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 தொகுதி இடைத்தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் பிளான்!- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய திட்டம் ஒன்றில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. 18 தொகுதியிலும் வெற்றிபெற அவர் முக்கியமாக திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள்.

    வருகின்ற தேர்தல் தமிழகத்திற்கு கொஞ்சம் வித்தியாசமானது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.

    தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அதே நாளில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது.

    போராட கூடாது.. பொள்ளாச்சி கனிமொழி ஆர்ப்பாட்டம்.. திமுக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு! போராட கூடாது.. பொள்ளாச்சி கனிமொழி ஆர்ப்பாட்டம்.. திமுக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

    திமுக என்ன திட்டம்

    திமுக என்ன திட்டம்

    இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அனைத்து தொகுதியிலும் திமுக போட்டியிடும். திமுக உறுப்பினர்களே 18 தொகுதியிலும் போட்டியிட போகிறார்கள்.

    வேட்பாளர்கள் தேர்வு

    வேட்பாளர்கள் தேர்வு

    இந்த நிலையில் இந்த 18 தொகுதியில் திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் கண்டிப்பாக பூண்டி கலைச்செல்வன்தான் என்பது உறுதியாகிவிட்டது. மீதம் இருக்கும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காக திமுக ரகசியமாக ஆலோசனை செய்து வருகிறது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    பெரும்பாலும் அதே தொகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நபர்களை போட்டியிட வைக்க ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள். பெரும்பாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தகுதி நீக்க எம்எல்ஏக்களைத்தான் இந்த தொகுதியில் நிற்க வைக்கும். அதனால் ஸ்டாலின் பழைய வேட்பாளர்களையே இங்கு நிற்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் பின்வரும் திட்டங்களை மனதில் வைத்து இருக்கிறார்.

    1. அனைத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக மட்டுமே போட்டியிடுவது.

    2. ஒரேயொரு தனி தொகுதியில் விசிகவை போட்டியிட வைப்பது.

    3. முக்கிய முகங்களை, தவிர்க்க முடியாத வேட்பாளர்களை களமிறக்குவது.

    4. 18 நபர்களும் தமிழகம் முழுக்க பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

    English summary
    DMK Chief M K Stalin plans for something big for 18 constituencies by-poll in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X