சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ!

ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பு மும்முரம் காட்டி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    'அவர்களுக்காக' அடிப்போடும் அதிமுக...அமமுக என்ன செய்யப் போகிறது?

    சென்னை: ஆட்சியை கவிழ்க்க மீண்டும் தீவிரம் நடக்கிறது.. அதனால் அங்கிட்டு இருக்கிற 'அவரை', இந்தப் இழுத்துக்கிட்டால், இங்கிட்டு 'இவரது' பிளானை தவிடிபொடியாக்க என்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பு பேச்சே! புரியலையா.. இதுதான் விஷயம்!

    இப்போது அதிமுகவுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்து போய் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் டெல்லியில் கட்சிக்கென்று ஒரு அங்கீகாரமே இல்லை, அதன்மூலம் கட்சிக்குள் எழும் உட்கட்சி பூசல், சண்டைகள், நீயா நானா விவகாரத்துகள் நடக்கிறது.

    இன்னொரு பக்கம் திமுக என்ன செய்ய போகுதோ, இருக்கிற 2 வருட ஆட்சியும் ஒழுங்காக போகுமா, போகாதா என்ற பீதியும் நிலவுகிறது.

    தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

    வெற்றிவேல்

    வெற்றிவேல்

    இதனால் கட்சியை காப்பாற்றவும், நீடிக்க செய்யவும் அமமுகவில் 2 முக்கிய நபர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. ஒருவர் தங்க தமிழ்செல்வன், இன்னொருவர் வெற்றிவேல்!

    தங்க தமிழ்செல்வன்

    தங்க தமிழ்செல்வன்

    இதில் தங்க தமிழ்செல்வனை அதிமுகவுக்குள் கொண்டுவந்தால் நிலைமை சீரடையும், கட்சி மீண்டும் பலம் பெறும் என்று அதிமுக தலைமை யோசிக்கிறது. இதற்கான முயற்சியும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தங்க தமிழ்செல்வன் நினைத்தால், அமமுகவின் பெரும்பகுதியை திரட்டி கொண்டு வந்து அதிமுகவுடன் இணைத்துவிடுவார் என்றே நம்பிக்கை அதிகமாக இருக்கிறதாம்.

    ஓபிஎஸ் தரப்பு

    ஓபிஎஸ் தரப்பு

    அதற்கேற்றவாறு, தங்க தமிழ்செல்வன் ரொம்பவுமே அமைதி போக்கை சமீப காலமாக கடைப்பிடித்து வருகிறார். ஒருவேளை இவர் அதிமுகவுக்குள் வந்தால் ஓபிஎஸ் தரப்பு மட்டும்தான் சற்று எரிச்சலடையும். இருந்தாலும் அவரை சமாளித்துவிடலாம் என்றே எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம்.

    எடப்பாடி அரசு

    எடப்பாடி அரசு

    அதேபோல, திமுக பக்கமும் பக்கா வேலை நடக்கிறது. ஆட்சி கலைப்பு என்பது இல்லாமல் போய்விட்டால், 2 வருஷத்துக்கு அதிமுகவை கையில் பிடிக்க முடியாது என்ற எண்ணம் வந்துள்ளது. அதனால் எப்படியாவது எடப்பாடி தரப்பை வீட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்து, அதற்கான அசைன்மெண்ட் அரவக்குறிச்சி பசை உள்ள நபரிடம் தரப்பட்டுள்ளது. கரன்சிகள் உள்ளே இறக்கப்பட்டு ஜரூர் வேலை நடப்பதால், அதிமுக தரப்பு எம்எல்ஏக்கள் அறிவாலயம் பக்கம் வரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இதனிடையே அமமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. அதிமுக ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதால், அந்த அணியில் இணைய வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் இணைந்து வருகிறார்கள். அல்லது ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன் அமமுக கை கோர்த்து செயல்படுமா என்றும் புரியவில்லை.

    வலதுகரம்?

    வலதுகரம்?

    ஆக மொத்தம், அன்று தினகரனின் வலதுகரமாக இருந்தவரை திமுக தள்ளிக் கொண்டு போய்விட்டது. இப்போது வலதுகரமாக இருப்பவரையும் அதிமுக குறி வைத்துள்ளது. இந்த இருவரில் எந்த வலதுகரம் சரியாக, புள்ளி வைத்து கோலம் போட்டு முடிக்க போகிறதோ பொறுத்திருந்து பார்க்கலாம்!

    English summary
    The DMK has come down heavily in order to topple Edapadi Palanisamy's regime
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X