சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகமே எதிர்பார்க்கும் 6 தொகுதிகள்... திமுக, பாமகவின் அனல் பறக்கும் மோதல்.. ஜெயம் யாருக்கு!

7 தொகுதிகளில் நேரிடையாக பாமக-திமுக கட்சிகள் நேரிடையாகவே மோதுகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவை தேர்தலுக்கான பாமக வேட்பாளர் பட்டியல்

    சென்னை: திமுகவிடம் பாமக சிக்கி கொண்டுள்ளதா? அல்லது பாமகவிடம் திமுக சிக்கி கொண்டுள்ளதா என தெரியாத அளவுக்கு 6 தொகுதிகளில் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன!

    ஆரம்பத்தில் திமுகவுடன்தான் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 7 தொகுதிகள் தர திமுக சம்மதம் தந்தநிலையில், திடீரென்று ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் அதிகமாக தருவதாக அதிமுக சொன்னதும், அந்த பக்கம் தடாலடியாக பாமக தாவியதாக சொல்லப்பட்டது. இந்த விஷயத்தில் வலுவான பாமகவை திமுக தன் பக்கம் இழுத்து கொள்ளாதது பெரிய மைனஸ்தான்!

    இது திமுகவுக்கு ஏமாற்றம் மட்டுமில்லாமல் இமேஜ் கலந்த விஷயமாகவும் உருமாற ஆரம்பித்தது. அதனால்தான் திமுக வலுவான இடங்களை கூட்டணிக்கு தராமல் எல்லாவற்றையும் தானே கையில் வைத்து கொண்டு பக்காவாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்தது.

    11 மாத சிறைவாசம்.. கடைசி நேரத்தில் கையெழுத்திட்ட உறவினர்.. ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி! 11 மாத சிறைவாசம்.. கடைசி நேரத்தில் கையெழுத்திட்ட உறவினர்.. ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி!

    உதயசூரியன்

    உதயசூரியன்

    இறுதியில், தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 6 பாமக போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாக வேட்பாளரை நிறுத்தியது. விழுப்புரத்தில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டாலும், அவரும் உதயசூரியன் சின்னத்தில்தான்போட்டியிடுகிறார். ஆக.. பாமகவின் ஏழு தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது என்பதுதான் சாராம்சம்!

    களப்பணி

    களப்பணி

    இந்த 7 தொகுதிகளிலுமே பாமகவை வீழ்த்த வேண்டும் என்ற உத்தரவு திமுக தலைமையால் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாம். ஆனால் பாமகவை பொறுத்தவரை வடமாவட்டங்களில் வலிமை பொருந்தியதாக உள்ளது. இருந்தாலும் அன்புமணி மட்டுமே அப்போது வெற்றி பெற்றிருந்த நிலையில் கடுமையான களப்பணியை கையில் எடுத்து வடமாவட்டங்களை வலிமையாக்கியது பாமக!

    காடுவெட்டி குரு

    காடுவெட்டி குரு

    ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக ஓரளவு பெற்றி பெற்றதால், இந்த முறையும் அதே வெற்றி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கி உள்ளது. அது மட்டுமல்ல, பாமகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் திமுகவுக்கு ஆதரவு தந்துள்ளது மேலும் பலத்தை கூட்டியுள்ளது. வேல்முருகனின் இந்த ஆதரவால், கண்டிப்பாக காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களும் திமுக வெற்றிக்காக மறைமுகமாக உதவுவார்கள் என்றே நம்பப்படுகிறது.

    திண்டுக்கல்

    திண்டுக்கல்

    திமுகவின் கோட்டை எனப்படும் மத்திய சென்னையில் பாமக அறிமுக வேட்பாளரை நிறுத்தி உள்ளது ஆச்சரியம்தான். அதேபோல, அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல்லில் பாமக போட்டியிட்டு என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரக்கோணம், கடலூர், ஸ்ரீபெரும்புதூர் போன்றவைகளில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும் திமுகவின் வியூகத்தை பொறுத்துதான் அந்த வெற்றி தோல்வி அமையும் என தெரிகிறது.

    அசைக்க முடியாது

    அசைக்க முடியாது

    ஆனால் தருமபுரியில் யார் நினைத்தாலும் அன்புமணியை அசைக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சாதீய காரணங்கள் இருந்தாலும், உண்மையிலேயே அந்த தொகுதிக்கு அன்புமணி செய்த அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் ஏராளமானவை. குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு தொகுதியை கடந்த 5 வருடமாக கவனித்து வந்துள்ளார். இதனால் மக்களின் அதிருப்தியை அன்புமணியால் எப்போதுமே அங்கு சம்பாதிக்க முடியாது. எனவே இந்த முறையும் அன்புமணிக்கு வெற்றி என்பது சாத்தியமாகவே உள்ளதாக தெரிகிறது.

    மாஸ்டர் பிளான்

    மாஸ்டர் பிளான்

    எப்படியும் இந்த 7 தொகுதிகளிலும் ஒத்தைக்கு ஒத்தை என்ற போட்டியில் பாமக-திமுக இறங்கிவிட்டன. கடுமையான களப்பணியில் ஈடுபட்டு இந்த 3 வருடங்களில் கட்சியை வலுவாக்கி உள்ள டாக்டர் ராமதாசுக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது கடைசி நேரத்தில் பாமகவை வீழ்த்த வேல்முருகனை அரவணைத்து மாஸ்டர் பிளான் போட்ட ஸ்டாலினுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

    English summary
    DMK and PMK are likely to contest in seven constituencies. So DMK gives tough fight in PMK Constituencies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X