சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தலைவருக்கு ஹேப்பி பர்த்டே".. மு.க. ஸ்டாலினைக் குளிர்வித்த அந்த டிவீட்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வருஷம் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையிலான விசேஷமான பிறந்த நாள்தான்.. அதை விட மறக்க முடியாத பிறந்த நாளுமாகும்.

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத நிலையில் முதல் சட்டசபைத் தேர்தலை கட்சித் தலைவராக ஸ்டாலின் சந்திக்கிறார். இது திமுகவுக்கும் மிக மிக முக்கியமான விஷயமாகும். அதேபோல அடுத்த முதல்வர் இவர்தான் என்று பலரும் சொல்லி வரும் நிலையில் வந்துள்ள முதல் பிறந்த நாளுமாகும்.

Prashant Kishor greets MK Stalin on his birth day

இப்படி அடுக்கடுக்காக பல சிறப்புகளை உள்ளடக்கிய பிறந்த நாளாக ஸ்டாலினுக்கு இன்றைய தினம் மாறிப் போயுள்ளது. இந்த நிலையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்து பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

அது பி.கே. என்று அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் போட்டுள்ள டிவீட்டாகும். திமுகவின் தேர்தல் உத்திகளை முழுமையாக கவனித்து வருவது பிகே குரூப்தான். இவர்கள் சொல்லித் தரும் பாதையில்தான் திமுக தலைவர் முதல் அனைவரும் நடை போடுகின்றனர்.

Prashant Kishor greets MK Stalin on his birth day

இந்த தேர்தல் திமுகவுக்கு மட்டுமல்ல பிகேவுக்கும் கூட ரொம்ப முக்கியமானது. இதில் ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் கூட பிகேவின் அரசியல் வாழ்க்கையும் கூட அதோ கதியாகி விடும் அபாயம் அடங்கியிருப்பதால் அவரும் கூட கவனமாகவே காய் நகர்த்தி வருகிறார்.

பிகே ஸ்டாலினுக்கு விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்தில், ஹேப்பி பர்த்டே தலைவர் ஸ்டாலின். உங்களது தலைமையில் திமுக மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெறத் தயாராகி வரும் நிலையில் இந்த ஆண்டு உங்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நிறைய விசேஷமானது என்று கூறி வாழ்த்தியுள்ளார் பி.கே.

பாமக குறிவைக்கும் தொகுதிகள் இவைதான்... விட்டுக்கொடுக்குமா அதிமுக பாமக குறிவைக்கும் தொகுதிகள் இவைதான்... விட்டுக்கொடுக்குமா அதிமுக

வழக்கம் போல பலரும் வந்து இதில் சரமாரியாக நெகட்டிவ், பாசிட்டிவ் கமெண்ட்டுகளை கலந்து கட்டி பதிலளித்து வருகின்றனர்.

English summary
DMK poll strtegist Prashant Kishor has greeted party president MK Stalin on his birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X