சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேத்து செம பாராட்டு.. இன்று பதவியை விட்டுப் போகச் சொல்லி பாட்டு.. திமுகவின் குழப்பம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Stalin on NEET | நீட் மசோதா.. சண்முகம்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்- வீடியோ

    சென்னை: அமைச்சர் சிவி சண்முகத்தை பதவி விலக கோரிக்கை விடுத்த திமுக நேற்றைய தினம் அவரை அழைத்து பாராட்டு தெரிவித்தது.

    சட்டசபையானாலும் சரி நாடாளுமன்றம் ஆனாலும் சரி அங்கு நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை மக்கள் விரும்பி தெரிந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டசபையில் சுவாரஸ்யத்துக்கும், சிரிப்பலைக்கும் பஞ்சமே இல்லை.

    இந்த நிலையில் நேற்றைய தினம் சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறைகளின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க 1.50 மணிக்கு தொடங்கிய அமைச்சர் சிவி சண்முகம், 2.25 மணிக்கு உரையை முடித்தார்.

    ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ... சட்டத்தில் ஓட்டையாம்...சொல்வது சட்டாம்பிள்ளை எச். ராஜா ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ... சட்டத்தில் ஓட்டையாம்...சொல்வது சட்டாம்பிள்ளை எச். ராஜா

    முழு பதில் உரை

    முழு பதில் உரை

    வழக்கமாக அமைச்சர்கள் பதிலுரை அளிக்கும் போது துறை சார்ந்த குறிப்புகளையும் புள்ளிவிவரங்களை சிறிய தாளில் எழுதி வைத்துக் கொண்டு அதை அப்படியே படிப்பவர். இன்னும் சில அமைச்சர்களோ முழு பதிலையும் எழுதி வைத்துக் கொண்டே படிப்பர்.

    பதில்

    பதில்

    ஆனால் நேற்றைய தினம் பதிலுரை அளித்த சிவி சண்முகம் எந்தவித குறிப்பும் இல்லாமல் சட்டத் துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு இதுவரை என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது, செயல்படுத்தியுள்ளது போன்ற தகவல்களை அமைச்சர் சிவி சண்முகம் புள்ளிவிவரங்களை குறிப்புகள் ஏதும் இல்லாமலேயே பேசினார்.

    திமுக எம்எல்ஏக்கள்

    திமுக எம்எல்ஏக்கள்

    இதை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். அது போல் கட்சி பேதமின்றி திமுக எம்எல்ஏக்கள் சிலரும் சிவி சண்முகத்தை அழைத்து பாராட்டினர்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் இன்று நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாக்கள் ஜனாதிபதியால் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக தவறான தகவலை அளிக்கும் அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK praises CV Shanmugam for replying details about his department without any paper notes in his hands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X