சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு சில மாநில மக்கள் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்கும்? அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் இந்தி எப்படி இந்தியஅவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு இன்று உள்துறை அமைச்சர் ட்விட்டர் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், இந்திதான் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தை இணைத்து வருகிறது. உள்ளூர் மொழிகளுடன் இந்தியையும் வளர்க்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார்.

DMK Presdient MK Stalin on Amit Shahs tweet about Hindi

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?

இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக பல நூற்றாண்டுகளாக இணைத்திருப்பது இந்தி... அமித்ஷா ட்வீட்இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக பல நூற்றாண்டுகளாக இணைத்திருப்பது இந்தி... அமித்ஷா ட்வீட்

இன்று இந்தி தினம்.... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துஇன்று இந்தி தினம்.... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

"கன்னடா சாக்கு.. இந்தி திவாஸ் யாக்கே?" இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் வெடித்த போராட்டம்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும்!

DMK Presdient MK Stalin on Amit Shahs tweet about Hindi

இந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK Presdient MK Stalin has opposed Union Minister Amit Shah's tweet on Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X