• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுக எம்.எல்.ஏ.மீது நள்ளிரவில் தாக்குதல்.. தூத்துக்குடி யார் கட்டுப்பாட்டில் உள்ளது..? -ஸ்டாலின்

|

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லை தனித்தீவாக மாறி விட்டதா என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

காவல்துறை நடுநிலை தவறாமல் எவர் பக்கமும் சாய்ந்துவிடாமல் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தப்பட்டு, இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள் - அந்த மாவட்டம் இன்னும் தமிழகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா - அல்லது "அ.தி.மு.க. - ஒரு சில உள்ளூர் போலீசார் கூட்டணி"யால் தனித் தீவாக மாறி விட்டதா என்ற மிகப்பெரிய சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

கொடும் நிகழ்வுகள்

கொடும் நிகழ்வுகள்

அப்பாவி இளைஞரைப் பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும் - தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகின்றன. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும் - தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மையின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராடி வருகின்ற நிலையில், அதுபற்றி அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் - போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை - நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை "ரவுடியிசம்" மூலம் அச்சுறுத்தத் துணை போவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள "உண்மையான குற்றவாளிகள்" வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆகவே இந்தக் கொலை வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு - குற்றவாளிகளையும் - தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

எவர் பக்கமும் சாயாமல்

எவர் பக்கமும் சாயாமல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியையும் - சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டி - பொதுமக்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆட்சி நாளை மாறும். ஆனால் தமிழகக் காவல்துறை, மக்களின் நன்மதிப்பைப் பெற்று, எப்போதும் நடுநிலை வகித்து, எவர் பக்கமும் சாய்ந்துவிடாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டிய பொறுப்புள்ள துறை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறைத் தலைவர் திரு. திரிபாதி ஐ.பி.எஸ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Dmk president Mk Stalin Condemn to Thoothukudi Police
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X