சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    Human Scavenging | கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லாமல் பறிபோன ஒரு உயிர்

    சென்னை: கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரிய வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்படி திருவல்லிக்கேணியை அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்த அருண்குமார், தனது சகோதரர் உள்பட 4 பேருடன் சென்றார்.

    இதையடுத்து உரிய பாதுகாப்பு கவசங்கள் இன்றி உள்ளே சென்ற அருண்குமார் மயக்கமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    ரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த பாப்பா!ரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த பாப்பா!

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் ஒப்பந்ததாரர் தண்டபாணியை கைது செய்தனர். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை மாற வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் இப்படி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலிடம்

    முதலிடம்

    இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு.

    திராவிட கொள்கை

    திராவிட கொள்கை

    இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை!

    மனித மாண்பு

    மனித மாண்பு

    நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin condemns for Manual Scavenging and says that Tamilnadu secures first place in death in Manual Scavenging. From 1993 to till date, 206 were died in this incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X