சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசின் அறிவிப்புகள்... ஆபத்துக்கு உதவாப் பிள்ளையை போன்றது... மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ஆபத்துக்கு உதவாப் பிள்ளையை போன்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மூச்சு விடமுடியவில்லை.. மோசமான உடல்.. பிளாஸ்மா தெரபி பெற்ற நபர் திடீர் பலி.. கர்நாடகாவில் ஷாக்! மூச்சு விடமுடியவில்லை.. மோசமான உடல்.. பிளாஸ்மா தெரபி பெற்ற நபர் திடீர் பலி.. கர்நாடகாவில் ஷாக்!

விமர்சனம்

விமர்சனம்

விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் "ஆக்கபூர்வமான நிவாரணங்களை"க் கொடுக்காமல் - "அலங்காரப் பேச்சுகள்" மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பா.ஜ.க. அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

வீடு தீப்பிடித்து எரியும்போது, உடனடியாகக் கிடைக்கும் தண்ணீரையும், மண்ணையும் வாரி இறைத்து அணைத்திட முயற்சிப்பதைப் போன்றது, பணமாகக் கொடுக்கப்படும் நிவாரண உதவி. "தீ பற்றி எரியட்டும்; அவசரப்பட வேண்டாம்; தீயணைப்பு நிலையத்திற்குச் செய்தி அனுப்பி இருக்கிறோம்; அங்கிருந்து வண்டி வரட்டும்; பொறுத்திருங்கள்" என்று சொல்வதைப் போல இருக்கின்றன மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்.

வேளாண் கடன் தள்ளுபடி

வேளாண் கடன் தள்ளுபடி

கலைஞர் 7000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - ஒரே கையெழுத்தில், இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து - மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அவர்களைக் கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் நிதியமைச்சர் முன்வரவில்லை?

வறுமை;வெறுமை

வறுமை;வெறுமை

விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உட்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவி வழங்கியும் - பாதிக்கப்பட்ட அனைவரையும் "வறுமை, வெறுமை" ஆகிய பலிபீடத்திலிருந்து மீட்டுப் பாதுகாத்திட வேண்டும்.

நாட்டின் நிதர்சனமான நிலை கண்டு, கருணை மழை பொழிந்திட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை மிகுந்த அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
dmk president mk stalin criticize finance minister nirmala seetharaman announcements
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X