சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசன் பற்றிய கேள்விக்கு ஒரே வரியில் பதில்.. ஸ்டன்னாக்கிய ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal- Stalin fight | திமுக - மநீம உறவு பாலம் திடீரென அறுந்தது ஏன்?

    சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன் தன்னைப் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்வதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியான ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

    கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியதை அரசியல் பார்வையாளர்கள் கவனிக்க தவறவில்லை.

    நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், கிராம சபை என்பது 25 ஆண்டுகளாக இருக்கிறது ஆனால் இதுவரை அதை யாருமே தேடவில்லை, என்று விமர்சனம் செய்தார்.

    கிராம சபை கூட்டம்

    கிராம சபை கூட்டம்

    நேற்று அரசியலுக்கு வந்த ஒரு சின்ன பையன், கிராமசபை கூட்டத்தை, கையில் எடுத்த பிறகு அதை காப்பி அடிக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று மறைமுகமாக ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப்பேசினார் கமல்ஹாசன். கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னெடுத்து வருவதோடு அந்த கட்சியினரையும் தீவிரமாக ஈடுபடுத்தி, வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்டாலினும் இதுபோன்ற கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளதால், கமல்ஹாசன் இவ்வாறு குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

    சட்டையை கிழிக்க மாட்டேன்

    சட்டையை கிழிக்க மாட்டேன்

    இது மட்டுமா.. நான் சட்டசபையில் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன். கிழிந்தாலும் கூட புது சட்டை அணிந்து கொண்டு மீண்டும் சட்டசபை செல்வேன் என்று கமல்ஹாசன் மற்றொருமுறை ஸ்டாலினை அதே நிகழ்ச்சியில் மறைமுகமாக வம்புக்கு இழுத்தார். சட்டசபையில் நடந்த மோதலின்போது ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து மெரினா கடற்கரையில் ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தான் கமல்ஹாசன் இவ்வாறு கூறியதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

    உதயநிதி ஸ்டாலின் பதில்

    உதயநிதி ஸ்டாலின் பதில்

    கமல்ஹாசனின் இந்த பேச்சு திமுகவினரை கோபப்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் கமல்ஹாசன் பேச்சு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கமல் சார் அறியாமையால் பேசுகிறார் என்று பதிலளித்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனுடைய புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் ஆளுநருக்கு எதிரான போராட்டத்திற்கு நேரில் சென்று ஸ்டாலின் ஆதரவு அளித்தார்.

    ஒரே வரி

    ஒரே வரி

    அப்போது நிருபர்கள் கமல்ஹாசன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் யோசிக்காமல், பதிலளித்த ஸ்டாலின், "நான் இங்கு அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார். அதன் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட நாராயணசாமி, உள்ளிட்ட அருகாமையில் இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லென்று சிரித்து விட்டனர்.

    கருணாநிதி பாணியில்

    கருணாநிதி பாணியில்

    கமல்ஹாசன் பேச்சு என்பது அரசியலுக்கு தொடர்பு இல்லாதது அல்லது கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதி என்று தான் மதிக்க வில்லை என்ற அர்த்தத்தில் ஸ்டாலின் இவ்வாறு மறைமுகமாக தாக்கி பேசினார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி போல அரசியல் எதிரிகள் குறித்த கேள்விக்கு ஒரே வார்த்தையில் நறுக்கென்று ஸ்டாலினும் பதில் கூறி விட்டதாக புழகாங்கிதம் அடைந்துள்ளனர் திமுகவினர்.

    English summary
    DMK president MK Stalin given sharp reply to the Makkal Needhi maiam party chief and actor turned politician Kamal Haasan who criticize Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X