சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், ஊழல் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பற்றி எரியும் வடகிழக்கு-106 ரயில்கள்-.9 விமான சேவைகள் ரத்து- பள்ளி, கல்லூரிகள் மூடல்- தலைவர்கள் கைதுபற்றி எரியும் வடகிழக்கு-106 ரயில்கள்-.9 விமான சேவைகள் ரத்து- பள்ளி, கல்லூரிகள் மூடல்- தலைவர்கள் கைது

மதிப்பீடு

மதிப்பீடு

உயர்நீதிமன்றத்தின் உத்திரவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், "மழை நீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது.

ஹார்லிஸ் சாலை

ஹார்லிஸ் சாலை

ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்" என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு' நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

அறிக்கை எங்கே?

அறிக்கை எங்கே?

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட 'திடீர் சோதனை' எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து 'வி.ஆர்.' எனப்படும் "விஜிலென்ஸ் ரிப்போர்ட்" போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?

தப்பமுடியாது

தப்பமுடியாது

ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.ஊழல் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

English summary
dmk president mk stalin says, Rs 1,000 crore corruption in Chennai corporation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X