சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்... ஸ்டாலின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Vikravandi By Election Result | அதிமுக-விற்கு கை மாறிய விக்கிரவாண்டி-வீடியோ

    சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேண்டும்... மீண்டும் அவகாசம் வேண்டும்... தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?வேண்டும்... மீண்டும் அவகாசம் வேண்டும்... தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்?

    மக்கள் தீர்ப்பு

    மக்கள் தீர்ப்பு

    ஆளும்கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது, பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று !அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்.

    துவளமாட்டோம்

    துவளமாட்டோம்

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில்; வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம்.

     நம்பிக்கை பெறுவோம்

    நம்பிக்கை பெறுவோம்

    இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும், இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பு வீண்போகவில்லை; வீண்போகாது!

    புதிய அரசுகள்

    புதிய அரசுகள்

    இதே காலகட்டத்தில் - மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்துள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போதிய எண்ணிக்கை

    போதிய எண்ணிக்கை

    இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனாலும், மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது, உள்ளபடியே பாராட்டத்தக்கது.

    English summary
    dmk president mk stalin says, we accept the byelection result
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X