சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு விவகாரம்... நாணமின்றி நாடகம் நடத்துகிறது தமிழக அரசு... மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அரசின் தோல்விகளை மறைக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாணமின்றி பகல் நாடகம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக ஆட்சியாளர்கள் தங்களின் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள மாணவர்களின் நலனை காவு கொடுத்துள்ளதாக அவர் ஸ்டாலின் சீறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;

ஒன்றல்ல, இரண்டல்ல, 1,00008 லட்டுகள்.. திருப்பூரில் தயாரிப்பு தீவிரம்.. வைகுண்ட ஏகாதசிக்காகஒன்றல்ல, இரண்டல்ல, 1,00008 லட்டுகள்.. திருப்பூரில் தயாரிப்பு தீவிரம்.. வைகுண்ட ஏகாதசிக்காக

மறைத்து

மறைத்து

நீட் தேர்வு விலக்கு கோரி இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத, அலட்சியமாக இருந்த அரசு அதிமுக அரசுதான். இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை பேரவைக்குச் சொல்லாமல் மறைத்து- "திருப்பிதான் அனுப்பியுள்ளார்கள். காரணம் கேட்டிருக்கிறோம்"என்று சமாளித்ததும் அதிமுக ஆட்சிதான்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

"நீட் கட்டாயம்" என்று சட்டம் பிறப்பித்த போதும் அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. நீட் தேர்வை அமல்படுத்தி- அனிதா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலைக்கும், பெற்றோரின் மரணத்திற்கும் வித்திட்டதும் அதிமுக அரசுதான்.

புதிய வழக்கு

புதிய வழக்கு

மாணவ, மாணவியர்க்குத் துரோகம் செய்து, அவர்களை திரிசங்கு நிலையில் நிறுத்தி- கடந்த நான்கு வருடங்களாக நீட் தேர்வு உண்டா, இல்லையா என்று கடைசி வரை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது அதிமுக அரசு. இந்தச் சூழலில்தான், "என்ன இது புதுக் குழப்பம்" என வரும் சினிமா வசன பாணியில், இப்போது புதிய வழக்குப் போட்டிருக்கிறது அதிமுக அரசு.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

மசோதாவிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசை எதிர்த்து வழக்குப் போட்டால், தனது முதலமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில்- இப்போது உச்சநீதிமன்றத்தின் கதவுகளை முதலமைச்சர் திரு எடப்பாடி திரு பழனிசாமி தட்டியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்கள்

மூத்த வழக்கறிஞர்கள்

திரு பழனிசாமி அவர்களுக்குக் காலம் கடந்து நினைவு பிறந்திருந்தாலும், இந்த வழக்கிலாவது முறைப்படி மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி- கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்- சமூக நீதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வு இந்தக் கல்வியாண்டே ரத்தானால்தான், இந்த ஒரு பிரச்சினையிலிருந்தாவது, அதிமுக அரசினர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

English summary
dmk president mk stalin slams cm edappadi palanaisami on neet exam issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X