சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிதம்பரத்துக்குப் போனை போட்ட மு.க.ஸ்டாலின்.. 3 நிமிடம் பேசி.. நலம் விசாரிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஐ.என்.எக்ஸ். வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்தார்.

சுமார் 3 நிமிடம் வரை நிகழ்ந்த அந்த தொலைபேசி உரையாடலில் ப.சிதம்பரத்துக்கு நம்பிக்கையூட்டக் கூடிய வகையிலும், உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுமாறும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதல் நபராக ஸ்டாலின் தம்மை அழைத்து நலம் விசாரித்தது ப.சிதம்பரத்துக்கு நெகிழ்ச்சியை அளித்ததாம்.

திரும்பி வந்த ஒரே நாளில் தெறிக்க விடும் ப.சிதம்பரம்.. பொருளாதார மந்த நிலை குறித்து அதிரடி பேட்டி! திரும்பி வந்த ஒரே நாளில் தெறிக்க விடும் ப.சிதம்பரம்.. பொருளாதார மந்த நிலை குறித்து அதிரடி பேட்டி!

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

திஹாரில் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஒரு வழியாக நேற்றிரவு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்நிலையில் இன்று காலை ப.சிதம்பரத்தை தொலைபேசி மூலம் அழைத்த ஸ்டாலின், உடல்நலம் பற்றி சிதம்பரத்திடம் விசாரித்துள்ளார். அவரும் சிறையில் இருந்த போது தனக்கு ஏற்பட்ட உபாதைகள் குறித்து விளக்கியுள்ளார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

மேலும், நடக்கும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், உங்கள் கைது மோடிக்கு தான் பின்னடைவு என சிதம்பரத்திடம் ஸ்டாலின் நம்பிக்கையூட்டியுள்ளார். பதிலுக்கு புன்னகைத்த சிதம்பரம் தம்மிடம் இருக்கும் மனதிடம் ஒருபோதும் குறையாது எனக் கூறியுள்ளார்.

சட்டவல்லுநர்

சட்டவல்லுநர்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது அது தொடர்பாக ஸ்டாலின் 2 முறை கருத்து தெரிவித்திருந்தார். முதல்முறை பேட்டியளித்த போது, ப.சி. ஒரு சட்ட வல்லுநர் என்பதால், அவரே அதை பார்த்துக்கொள்வார் என்றும், பிறகு பொருளாதார மந்தநிலையை திசை திருப்ப ப.சி. கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

பின்னணி

ப.சிதம்பரத்தை ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பேசியது பற்றி விசாரித்ததில், கூட்டணிக் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற்றது, மற்றபடி இதைப்பற்றி கூற ஒன்றுமில்லை என பதில் கிடைத்தது.

English summary
dmk president mk stalin spoke on the phone with p.chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X