சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்! இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: உயர்நீதிமன்றம் அளித்த ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓபிசி இடஒதுக்கீட்டை முதுகலை மருத்துவ படிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், இதுபற்றி மத்திய அரசு 100 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

புதிய கல்விக்கொள்கையே தவறானது.. மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி.. ஸ்டாலின் பாராட்டு!புதிய கல்விக்கொள்கையே தவறானது.. மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி.. ஸ்டாலின் பாராட்டு!

DMK President mk stalin spoke to PM narendra modi over phone over OBC reservation

இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

DMK President mk stalin spoke to PM narendra modi over phone over OBC reservation

Recommended Video

    PM Modi speech on NEP 2020

    இதன் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதன் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன். முன்னுரிமை மற்றும் மாநில இடஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    English summary
    DMK President mkstalin spoke to PM narendramodi over phone. He urged to implement the judgement of Chennai HC on OBC reservation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X