சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு

Google Oneindia Tamil News

சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார்.

Recommended Video

    #BREAKING கொளத்தூரில் போட்டியிட ஸ்டாலின் விருப்ப மனு!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1984-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். 1984-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மு.க.ஸ்டாலின்.

    DMK President MK Stalin submits appilication seeks to Contest from kolathur constituency

    1989-ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஸ்டாலின். 1991-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஸ்டாலின், 1996-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

    2001, 2006 சட்டசபை தேர்தல்களிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் ஸ்டாலின். 2011, 2016 தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஸ்டாலின். தற்போது 3-வது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

    மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடுமாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு

    சட்டசபை தேர்தலில் 9-வது முறையாக போட்டியிடுகிறார் ஸ்டாலின். அவர் விருப்ப மனு கொடுத்த போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுகவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

    English summary
    DMK President MK Stalin has submitted an appilication seeking to Contest from kolathur constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X