சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு ரத்து, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசு எடுத்துள்ள சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

கொரோனா பாதிப்பு.. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! கொரோனா பாதிப்பு.. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மக்கள் நலன்

மக்கள் நலன்

நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்பட்டிராத இந்தப் பிரச்சினையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அனைத்துக் குடிமக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

கிரிமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுவதாலும், இம்முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், குறிப்பாக இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இம்முடிவினை திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது.

பிரதமரிடம் வலியுறுத்தல்

பிரதமரிடம் வலியுறுத்தல்

நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் பட்டியல் 3-ன்கீழ் பொதுப்பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது. அவசரச் சட்டத்தின் மூலமாக உரியத் திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் நான் உங்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்றத்தாழ்வு

ஏற்றத்தாழ்வு

தொற்றுநோயினால் நாடு இத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரிக்கத் தான் போகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான கொள்கை முடிவுகளைத் தொடர்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
dmk president mk stalin wrote letter to pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X