சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை

    நிறைவேற்றுதல்

    நிறைவேற்றுதல்

    இவர்களது தண்டனை காலம் முடிந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    இதையடுத்து தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இது வரை அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே வேளையில் பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூன்று பேரை மட்டும் நல்லெண்ண நடவடிக்கையில் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

    தேர்தல் அறிக்கை

    தேர்தல் அறிக்கை

    இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய அற்புதம்மாள் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    நல்ல அறிக்கை

    நல்ல அறிக்கை

    அதில் ஸ்டாலின் கூறுகையில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மனதிலும் பாலை வார்க்கும் விதமாக உள்ளது.

    English summary
    DMK manifesto says that if DMK-Congress comes to power then it will process the release of 7 tamils.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X