சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!

    சென்னை: ரயில்வேயின் இந்தி திணிப்பு முயற்சிக்கு மின்னல்வேகத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வைத்து அந்த உத்தரவையே வாபஸ் பெற வைத்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது திமுக.

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழித் திட்டம் திணிப்பு இடம்பெற்றுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தது.

    ஆனால் இந்திக்கு எதிராக சண்டமாருத குரல் எழுப்பும் திமுக பல மணிநேரம் மவுனம் காத்து பின்னர் ஒரு அறிக்கை வந்தது. திமுக அதிரடி போராட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்த்த அக்கட்சியினருக்கே இந்த 'மதமத'த்தனம் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

    தமிழில் பேச தடை

    தமிழில் பேச தடை

    தற்போது தெற்கு ரயில்வேயில் அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் பேச வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தது; தமிழில் பேசவும் தடை விதித்திருந்தது. இது தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. திமுக எம்.பி. கனிமொழி தமது சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

    வியூகம் வகுத்த திமுக

    வியூகம் வகுத்த திமுக

    மேலும் சென்னையில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. பரவாயில்லையே ஒரே நாளில் திமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறதே என அக்கட்சி தொண்டர்களே ஆச்சரியப்பட்டுப் போயினர்.

    நேரில் சந்தித்து வலியுறுத்தல்

    நேரில் சந்தித்து வலியுறுத்தல்

    அவர்கள் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள் அடுத்த பந்தை வீசி சாதித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினரை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து மனு கொடுக்க வைத்தார். அத்துடன் அந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனவும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இந்தி உத்தரவு வாபஸ்

    இந்தி உத்தரவு வாபஸ்

    இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்தி திணிப்பு உத்தரவை திரும்பப் பெறுவதாக ராகுல் ஜெயின் அறிவித்துவிட்டார். திமுகவின் இந்த மின்னல்வேக நடவடிக்கையில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராட்டப்பட்டு வருகிறார்.

    அதுவும் சமூக வலைதளங்களில் தயாநிதி மாறனுக்கு இந்தி பேச தெரியும் என்பதால் மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதாக ஒரு பேட்டியை முன்வைத்து திமுக மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எந்த தயாநிதி மாறனை முன்வைத்து திமுகவின் மொழிப் போர் தியாகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அதே தயாநிதி மாறனையே அனுப்பி இந்தியை திணிக்கும் உத்தரவை வாபஸ் பெற வைத்திருக்கிறார் ஸ்டாலின்... இந்த வியூகத்தைத்தான் நாங்கள் மெச்சுகிறோம் என்கின்றனர் திமுகவினர்.

    English summary
    After the DMK Protest Southern Railway has announced will withdraw its Hindi Imposition order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X