சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்!

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு கட்சியினர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திமுக மாவட்ட செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு கட்சியினர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சீனியர்கள் மத்தியில் ஸ்டாலின் இமேஜ் ஒரே நாளில் உயர்ந்துள்ளதாம்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் திமுக போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார்.

2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் முதலில் கண்டன பேரணியாக மட்டுமே நடப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் கூட ஆர்ப்பாட்டமாக மாறியது. இதில் மோடி ஒழிக, அமித் ஷா ஒழிக என்றும் உதயநிதி ஸ்டாலின் கோஷம் போட்டார். உதயநிதியை தொடர்ந்து திமுகவினர் பலரும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

மதிப்பு

மதிப்பு

இந்த போராட்டம் நடக்கும் முன்பு வரை உதயநிதி ஸ்டாலினை சில சீனியர்கள் பெரிய அளவில் மதிக்கவில்லையாம். ஸ்டாலினின் மகன் என்ற அளவிற்கு மட்டுமே உதயநிதிக்கு மரியாதை அளித்து இருக்கிறார்கள். ஆனால் உதயநிதி களமிறங்கி போராடியதை பார்த்த பின் அவர்கள் எல்லாம் மனம் மாறி இருக்கிறார்கள்.

ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா?, செல்லாதா?.. அமைச்சர் பதில்ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா?, செல்லாதா?.. அமைச்சர் பதில்

என்ன இமேஜ்

என்ன இமேஜ்

இந்த குடியுரிமை சட்ட போராட்டம். தேசிய அளவில் இது தொடர்பான செய்திகள் வலம் வருகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலின் போராட்டமும் நாடு முழுக்க பெரிய அளவில் பேசப்பட்டது. தேசிய சேனல்கள் உதயநிதி ஸ்டாலின் போராட்டத்தை பெரிய அளவில் கவர் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

என்ன மசோதா

என்ன மசோதா

ஆகவே தேசிய அளவில் இந்த மசோதாவை எதிர்க்கும் மக்களுக்கு திமுக மீது ஒரு மதிப்பு வந்துள்ளது. மக்களுக்கும் உதயநிதி முகம் தெரிய வந்துள்ளது. இதுதான் கட்சிக்குள் உதயநிதி மதிப்பு உயர காரணம் என்று கூறுகிறார்கள்.

நகல்

நகல்

அன்று நடந்த போராட்டத்தின் போது குடியுரிமை சட்ட நகலை உதயநிதி கிழித்தது பெரிய வைரலானது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சட்ட நகலை கிழிக்கும் போராட்டம் என்பது ஸ்டாலின் கொடுத்த ஐடியாவாம். இதற்கு முன் மத்திய அரசின் பல அறிவிப்பாணைகளை ஸ்டாலின் இப்படி கிழித்து போராடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இந்த போராட்டத்திற்கு பின் உதயநிதியை திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த உதயநிதியை பாராட்டி இருக்கிறார்கள். திமுகவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது உதயநிதி முக்கியத்துவம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK protest against Citizenship Amendment gives a new image to Udhyanidhi Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X