சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளை ஏமாற்றும் விஷ வாயுதான் எடப்பாடி... ஈவு இரக்கமற்றவர்... முக ஸ்டாலின் விளாசல்!!

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய மசோதாவை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் திமுக போராட்டம் துவங்கி நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக கீழ் அம்பியில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

விவசாய மசோதாக்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கும் இடையே நிறைவேறியது. இந்த மசோதாவினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச விலை பாதிக்கப்படும் என்றும் கார்ப்பரேட்களின் கைக்கு விவசாயம் செல்லும் என்றும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

DMK protest agri protest: Edappadi Palanisamy is the poisonous gas he deceives the farmers says MK Stalin

லோக் சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, ராஜ்ய சபாவில் நிறைவேற்றும்போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவை திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ராஜ்ய சபாவில் இந்த மசோதாக்களை நிறைவேற்றும்போது, சபை விதிகள் அடங்கிய பேப்பர் மற்றும் விவசாய மசோதாக்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் கிழித்து எறிந்தனர்.

இந்த நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவையில் முழுவதும் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக் கூடாது என்று ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து இருந்தார். இதையும் எதிர்த்து எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார். இனி இந்த மூன்று மசோதாக்களும் சட்டமாகின்றன. இதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக, காங்கிரஸ் அறிவித்து இருந்தன. இதன்படி திமுக தோழமை கட்சிகள் இன்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

DMK protest agri protest: Edappadi Palanisamy is the poisonous gas he deceives the farmers says MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் இருக்கும் கீழ் அம்பி என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டத்தை நடந்திக் கொண்டு இருக்கிறோம். திமுக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறது. திமுக 70 மாவட்டங்களாக பிரித்து வைத்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் விவசாய பெருங்குடி மக்களை தண்டித்துக் கொண்டுள்ளனர். காலில் போட்டு மிதித்துக் கொண்டுள்ளனர். மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். ஏழைத் தாயின் மகன் என்று கூறுவார். அவர்தான் தற்போது ஏழைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்.

மாநிலத்தில் ஒருவர் தன்னை விவசாயி என்று கூறிக் கொள்கிறார். அவர் வேடதாரியா, விஷமா என்பது தெரியாது. அவர் பொறுப்பு ஏற்ற பின்னர்தான் விவசாயம் பறிபோய்க் கொண்டுள்ளது. ஏழை மக்களுக்கு மத்திய மாநிலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு எதிரான செயல்களை செய்து கொண்டுள்ளனர்.

DMK protest agri protest: Edappadi Palanisamy is the poisonous gas he deceives the farmers says MK Stalin

விவசாயத்தை முன்னேற்றுவதற்காக மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று கூறி கொள்கின்றனர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த சட்டத்தால் எந்த நன்மையும் இல்லை. நன்மை வேண்டாம். ஆனால், கெடுதல் நடக்கக் கூடாது. விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட இருக்கின்றனர். நாம் மட்டுமா எதிர்க்கிறோம். பஞ்சாப் மாநிலம்தான் தொடங்கியது.

பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் எதிர்க்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிதான் எதிர்க்கிறது. பாஜகவுடன் கூட்டணி சேர முடியாது என்று கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. விவசாயிகளுக்கு என்ற கட்டமைப்பை கொண்டு வந்துள்ளோம். அதை பாஜக சீரழித்துள்ளது என்று ஷிரோமணி தெரிவித்துள்ளது.

மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த சட்டங்களையும் திமுக எதிர்க்கிறது. நாட்டில் இருக்கும் பஞ்சாப், கேரளா, டெல்லி, அரியானா, மேற்குவங்கம், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் 34 விவசாய அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.

அரியானாவில் ரயில் தண்டவாளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் சமைத்து சாப்பிடுகின்றனர். பஞ்சாபில் கடைகளை அடைத்து வருகின்றனர். இந்தியாவே எதிர்த்து வருகிறது. கேரளா மாநிலம் வழக்கு தொடுப்பதற்கு தயாராகி வருகிறது. எடப்பாடி அரசும் எதிர்த்து வழக்கு போட முன் வர வேண்டும். இல்லை என்றால் திமுக நீதிமன்றத்துக்கு செல்லும்.

போராடுபவர்களை கைது செய்ய மாட்டோம் என்று பஞ்சாப் மாநில அரசும், டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்துள்ளன.

விவசாய சட்டம்: பச்சை துண்டு, மாஸ்க்.. பச்சை பசேல் வயலில் இறங்கிய ஸ்டாலின்.. கீழம்பியில் ஆர்ப்பாட்டம்விவசாய சட்டம்: பச்சை துண்டு, மாஸ்க்.. பச்சை பசேல் வயலில் இறங்கிய ஸ்டாலின்.. கீழம்பியில் ஆர்ப்பாட்டம்

வெட்கம் இல்லாமல் ஈவு இறக்கம் இல்லாமல் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஆதரித்து வந்துள்ளது அதிமுக. இது எடப்படிக்கே தெரியாது என்ற செய்தியும் வெளியானது. எடப்பாடி ஆதரித்து விளக்கம் தருகிறார். விஷ வாயுதான் எடப்பாடி பழனிசாமி. காவிரியில் விவசாயிகளுக்கு என்ன செய்து இருக்கிறார் எடப்பாடி.'' என்றார்.

மக்களுக்கு எதிரான சட்டங்களைத்தான் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் ரூ. 15 லட்சம் கெடுப்பேன் என்று கூறி இருந்தார். கொடுத்தாரா. விவசாய மசோதாக்களை நிறைவேற்றும்போது வாக்கெடுப்பு நடத்தவில்லை. குரல் வாக்கெடுப்பும் ஒழுங்காக நடத்தவில்லை. உண்மையான வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் ராஜ்ய சபாவில் இந்த மசோதா தோல்வி அடைந்து இருக்கும். '' என்றார்.

English summary
DMK protest agri protext: Edappadi Palanisamy is the poisonous gas he deceives the farmers says MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X