சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவா இது?.. பிடிஆரா இப்படி? முதல்வர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்கணும்.. அண்ணாமலை பளிச்

பிடிஆர் பேச்சுக்கு பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விற்பனையை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது... திமுகவை தவிர, மற்ற அனைத்து கட்சியினரையும் அவர் அளவுக்கு அதிகமாக விமர்சித்து வருகிறார்.. அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை கொண்டுவர மாநில அரசுகள் சம்மதிக்காதது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிடிஆர், "மத்திய அரசு, செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணம் போன்றவற்றை நீக்கினால், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மறுபடியும் ஒருமுறை ஆய்வு செய்வோம்..

இன்னும் ஓயாத பஞ்சாயத்து.. பிடிஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலைஇன்னும் ஓயாத பஞ்சாயத்து.. பிடிஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

 பெட்ரோல் வரி

பெட்ரோல் வரி

இப்போதே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியும்... அதிமுக அரசு வரியை குறைத்தது இல்லை. ஆனால் திமுக அரசு குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு செல்லப்பட்டால், இந்த விஷயத்தில் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படும்" என்று நீண்ட விளக்கம் ஒன்றினை தந்திருந்தார்... இது பாஜக மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர தாங்கள் முயன்றதாகவும், ஆனால், மாநில அரசுகள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் காரணம் கூறி வருகின்றனர்.. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை இனி குறையப்போவதில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் நிதியமைச்சரின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து பேட்டி தந்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

அவர் சொன்னதாவது: "மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சிகள், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளன.. மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது... அப்போது, உணவு பொருட்கள் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டியது. இது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 6 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது... பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.

Recommended Video

    PTR சுளீர்! | மாட்டு மூத்திரம் குடித்து மூளை கெட்டு விட்டதா? | Oneindia Tamil
     பெட்ரோல் - டீசல்

    பெட்ரோல் - டீசல்

    பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் துறைக்கு அரசு தாரைவார்க்கவில்லை... காங்கிரஸ் ஆட்சியில் தான், அந்த நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன... பெட்ரோல், டீசல் விலை உயரும் போது சாமானியர்கள் பாதிக்கின்றனர்... அதனால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி வரியில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எந்த வஞ்சகமும் செய்யவில்லை... பெட்ரோல், டீசல் விற்பனையை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    ஜிஎஸ்டி

    ஜிஎஸ்டி

    இதுவே, எங்கள் விருப்பம்... இதனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இழப்பு ஏற்படும். தமிழக அரசு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்... ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு, தமிழக நிதியமைச்சர் செல்லாமல், அவர் சொல்லும் இந்த பதில் ஆச்சரியமாக இருக்கிறது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என்று கூறிய திமுக இப்போது ஆளுங்கட்சியாக வந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    திமுக

    திமுக

    எனவே, இதற்கான காரணத்தை, திமுக தெரிவிக்க வேண்டும்... தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் பேச்சும், அவர் சோஷியல் மீடியாவில் பதிவிடும் கருத்துக்களும் கண்டிக்கத்தக்கவை.. திமுகவை தவிர, மற்ற அனைத்து கட்சியினரையும் அவர் அளவுக்கு அதிகமாக விமர்சித்து வருகிறார்.. அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    English summary
    DMK PTR Palanivel Thiagarajan says about GST and BJP Annamalai questioned on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X