சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முரசொலி அலுவலக விவகாரம்.. ஆதாரமில்லாததால் கால அவகாசம் கேட்டார் பாஜக நிர்வாகி- ஆர் எஸ் பாரதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Thol Thirmavalavan asks whether Murasoli office only be built in Panchami Land?

    சென்னை: முரசொலி அலுவலக விவகாரத்தில் ஆதாரமில்லாததால் புகார் அளித்த பாஜக நிர்வாகி சீனிவாசனே அவகாசம் கேட்டுள்ளார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்தார்.

    முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் என்ன என ஸ்டாலின் கேட்டார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கூறினார். புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    DMK R.S. Bharathi says there is no evidence to prove Murasoli is Panchami land

    முரசொலி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் உதயநிதி என்பதால் அவருக்கு வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அது போல் தமிழக தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகியுள்ளார்.

    பிஎப் பென்சன்தாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க 30ம் தேதி கடைசி தேதி.. ஈபிஎப்ஒ முக்கிய அறிவிப்புபிஎப் பென்சன்தாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க 30ம் தேதி கடைசி தேதி.. ஈபிஎப்ஒ முக்கிய அறிவிப்பு

    இதுகுறித்து ஆர் எஸ் பாரதி கூறுகையில் முரசொலி விவகாரத்தில் புகார் தந்த சீனிவாசன் அவகாசம் கேட்டுள்ளார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. தலைமை செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார்.

    முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை. ஸ்டாலினின் வளர்ச்சிப் பிடிக்காமல் இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்கள் என ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.

    English summary
    DMK MP R.S. Bharathi says that there is no evidence for complainiant to prove the Murasoli office was built in Panchami Land.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X