சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகோவுக்கு வழி பிறந்ததால்.. வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் திமுகவின் 3வதுவேட்பாளர் என்.ஆர்.இளங்கோ

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர்: வைகோவின் மனு ஏற்பினால் தொண்டர்கள் மகிழ்ச்சி...

    சென்னை: திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதால், திமுக சார்பில் களம் இறங்கிய மாற்றுவேட்பாளர் என்.ஆர். இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

    தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு வரும்18 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிடும 3 வேட்பாளர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர் ஆவார்.

    dmk rajya sabha candidate NR Elango withdraw his petition

    வைகோ ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்யவிருந்த நேரத்தில், அவருக்கு தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் வைகோவின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தீர்பபை நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

    இதையடுத்து வைகோ ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ மாற்று வேட்பாளராக களம் இறங்கினார்.

    இதனிடையே நேற்று வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தண்டனை தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதிமுக வேட்பாளர்களும் வைகோவின் வேட்புமனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் ஏற்கப்பட்டது.

    "சாப்ட்"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. "ஹாட்" பிரச்சினைகளிலும் "கூல் கூல்" போக்கு!

    இதையடுத்து இன்று சாலை சட்டசபை செயலாளர் ஸ்ரீனிவாசனை சந்தித்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ மனு அளித்தார். இதன்படி மனுவை வாபஸ் பெற்றுள்ளார். எனவே 4வது வேட்பாளராக திமுக களம் இறக்கியிருப்பதாக கூறப்பட்டது முற்றிலும் வதந்தி என்பது தெளிவாகி உள்ளது. முன்னதாக அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை குறிவைத்து 4வது வேட்பாளரை திமுக களம் இறக்கி இருப்பதாக தகவல்கள் பரவியது.

    English summary
    dmk rajya sabha candidate NR Elango withdraw his petition after election commission accept vaiko's petition
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X