சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது போலீஸ் வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் பிரமாண்ட பேரணியை திமுக நடத்தியது, இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

DMK Rally- Chennai Police filed Case 8,000 People

மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் இப்பேரணியில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English summary
Chennai Police filed Case against 8,000 people including DMK President MK Stalin for holding a rally against Citizenship Amendment Act in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X