சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாலை 6 மணியை தாண்டி திமுக வேட்பாளர் பட்டியல்… ராகுகாலம் முடிந்த பின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாளில் வெளியான திமுக, அதிமுக அறிவிப்பு... ஏன் தெரியுமா ?

    சென்னை:லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஞாயிறு மாலை 6 மணிக்கு பிறகு வெளியானதற்கு ராகு காலமே காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவும் அதிமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கின்றன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

    2 பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தங்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து திமுகவும் அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெற்ற ஸ்டாலின்கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெற்ற ஸ்டாலின்

    8 தொகுதிகளில் நேரடி

    8 தொகுதிகளில் நேரடி

    குறிப்பாக இரண்டு கட்சிகளும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன்படி தென்சென்னை, திருவண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நெல்லை ஆகிய 6 பொது தொகுதிகளிலும், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 2 தனித்தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

    11 தொகுதிகளில் போட்டி

    11 தொகுதிகளில் போட்டி

    பெரம்பலூர், தென்காசி, வேலூர் ஆகிய தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. உதய சூரியன், இரட்டை இலை இடையே மொத்தம் 11 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது.

    தனித்தொகுதிகள் யாருக்கு?

    தனித்தொகுதிகள் யாருக்கு?

    இதே போல் விழுப்புரம் தனித்தொகுதியில், நேரெதிர் கட்சிகளாக பார்க்கப்படும் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நேருக்கு நேர் மோதுகின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஞாயிறு மாலை 6 மணிக்கு பிறகு வெளியாவதற்கு ராகு காலமே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏன் என்றால்..அன்றைய தினம் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம் ஆகும்.

    திமுக வேட்பாளர்கள்

    திமுக வேட்பாளர்கள்

    எனவே.. அந்த நேரம் முடிந்தபிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக... மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரியன் மறைவுக்கு பிறகு நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது இல்லை. எனவே அந்த நேரத்தை தவிர்த்து தான் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Political experts says that release of DMK candidates in the Lok Sabha election Sunday after 6 pm because of raaghu time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X