சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை-வீடியோ

    சென்னை: மக்களவை துணை சபாநாயகர் பதவி திமுகவை தேடி வரும் நிலையில் அதனை பெற அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறாராம்.

    பாஜக மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஏறத்தாழ 5 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை மக்களவை துணை சபாநாயகர் பதவி காலியாகவே உள்ளது. அவையை சபாநாயகர் ஓம் பிர்லாவும், அவர் இல்லாத நேரத்தில் மூத்த உறுப்பினர்கள் ஆ.ராசா, மீனாக்‌ஷி லேகி உள்ளிட்டோர் கடந்த கூட்டத்தொடரில் நடத்தினர்.

    DMK reluctant to seek Deputy Speaker of Lok Sabha

    கடந்த முறை மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு தரப்பட்டது. தம்பிதுரையை அந்த பதவியில் அமர வைத்ததன் மூலம் அரசுக்கு எதிராக அதிமுகவை குரல் எழுப்ப முடியாமல் பார்த்துக்கொண்டார் பிரதமர் மோடி. கடந்தமுறை மக்களவை , மாநிலங்களவை என 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்திருந்தும் தமிழகப் பிரச்சனைகளுக்காக ஓங்கி உரக்க அதிமுகவால் போராட முடியவில்லை.

    இந்நிலையில், இம்முறை மக்களவை துணை சபாநாயகர் பதவி திமுகவை தேடி வருகிறது. ஆனால் அதனை பெறுவதில் திமுக தலைமைக்கு ஆர்வம் இல்லை எனக் கூறப்படுகிறது. பாஜகவுடன் இணக்கமாகிவிட்டார் ஸ்டாலின் என்ற பேச்சு வரும், அது திமுகவை பற்றிய பிம்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என நினைக்கிறாராம் அவர். இருப்பினும் ஒரு வேளை அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டால், அதற்கு யாரை கை காட்டுவது என்பது குறித்தும் குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

    உஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'உஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'

    மக்களவை துணை சபாநாயகர் பதவியை கைப்பற்ற கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகிய நால்வர் மட்டுமே ரேஸில் இருக்கிறார்கள். எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு விருப்பம் இருந்தாலும் வயது காரணமாக ஒதுங்கியுள்ளாராம். இதனிடையே திமுக ஒரு வேளை மக்களவை துணை சபாநாயகர் பதவியை நிராகரித்தால், அது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு அளிக்கப்படுமாம்.

    English summary
    DMK reluctant to seek Deputy Speaker of Lok Sabha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X