சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு

டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்எஸ் பாரதி வலியுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    RS Bharathi: ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ் பாரதி

    சென்னை: "மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் ராமதாஸும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, திமுக அல்ல என்றும், திருட்டுத்தனமாக வாக்குகளை பதிவுசெய்து வந்தது ராமதாஸ் கூட்டம்தான் என்றும் ஆர்எஸ் பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

    நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தருமபுரியில் தேவையின்றி, மறுவாக்கு பதிவை திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுகவும், அதன் தலைமையும் தருமபுரி தொகுதி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

    ராமதாஸ் இவ்வாறு சொன்னதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதில் அளித்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்:

    மூன்று ''என்'' களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன? மூன்று ''என்'' களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன?

     சொல்றது புரியுதா?

    சொல்றது புரியுதா?

    "தேர்தலில் என்ன நடக்கும்? பூத்தில் என்ன நடக்கும்? நாம்தான் இருப்போம் பூத்தில்... சொல்றது புரியுதா? இல்லையா?" என்று மக்களவைத் தேர்தல் தொடங்கிய உடனே திருப்போரூர் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியது யார்? அன்புமணி ராமதாஸ் தானே? இதன் உள்நோக்கம் என்ன? தருமபுரி தொகுதியில் இதை அன்புமணியினுடைய ஆட்கள் தேர்தல் அன்று கச்சிதமாக செய்து முடித்தனர்.

     அராஜகங்கள்

    அராஜகங்கள்

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களை வாக்களிக்க முடியாத அளவுக்கு எல்லாவிதமான அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களின் வாக்குகளை, அன்புமணி ராமதாஸ் ஆட்களே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, வாக்குகளை பதிவு செய்தனர் என்பது ஊரறிந்த உண்மை.

     மறுவாக்கு பதிவு

    மறுவாக்கு பதிவு

    இதை அன்புமணி ராமதாஸால் திட்டவட்டமாக மறுக்க முடியாத காரணத்தால் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது என்பதை ராமதாஸ் ஏனோ புரிந்து கொள்ள மறுக்கிறார், மறைக்கின்றார். மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில், வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்கள் பல ஊடகங்களில் பேட்டி அளித்தது ராமதாஸ் கண்களுக்குத் தெரியவில்லையா?

    திருட்டுத்தனம்

    திருட்டுத்தனம்

    வாக்களித்த பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில் "இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றுதான் நாங்கள், எங்களுக்குரிய வாக்கினை, நாங்களே பதிவு செய்தோம்." என்று கூறினர். இதிலிருந்து என்ன புரிகிறது. இதுவரை ராமதாஸ் கூட்டத்தினரே அவர்களின் வாக்குகளை, திருட்டுத்தனமாக பதிவுசெய்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

     வீண் பழி

    வீண் பழி

    எனவே, திமுகதான் அவர்களின் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கு உரிமை பெற்று தந்ததை, அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியதை ஊடகங்கள் வெளிப்படுத்தின. இதை பார்த்து, பொறுத்துக்கொள்ள முடியாமல், ராமதாஸ் திமுக மீது வீண் பழி போடுகிறார்.

     ராமதாஸ் கேள்வி

    ராமதாஸ் கேள்வி

    குறிப்பிட்ட பகுதி வாக்காளர்களுக்கு, வாக்களிக்கின்ற உரிமையை பெற்றுத் தந்த திமுகவை எரிச்சலுடன் அறிக்கை விடும் ராமதாஸ், தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இரண்டு வாக்குச் சாவடிகளில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் மறுவாக்குப் பதிவு கேட்காத பட்சத்தில், இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு செய்திட ஐம்பது மின்னணு இயந்திரங்களை கோவையிலிருந்து தேனிக்கு கொண்டு வந்ததைப் பற்றி ராமதாஸ் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? "மாமியார் உடைத்தால் மண் பானை, மருமகள் உடைத்தால் பொன் பானை" என்ற பழமொழிதான் ராமதாஸின் அறிக்கை ஞாபகப்படுத்துகிறது.

     மன்னிப்பு

    மன்னிப்பு

    மறுவாக்குப் பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் ராமதாஸ், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, திமுக அல்ல" என கூறியுள்ளார்.

    English summary
    RS Bharathi alleged that PMK founder Dr Ramadoss false accusation on DMK Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X