சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணம் கொடுக்காமலேயே ஜெயிச்சுட்டு வாங்க- திமுக உத்தரவால் கையை விரிக்கும் மா.செ.க்கள்- நிர்வாகிகள் ஷாக்

Google Oneindia Tamil News

சென்னை: சட்ட்சபை தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிடுவோம்.. அதனால் கட்சியிடம் இருந்து வழக்கமாக வரும் பணத்தை எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்த தொடங்கியிருப்பது மாவட்ட நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கணக்குகள் மாறுமா? மாறுமா? கட்சிகள் இருக்குமா? காணாமல் கரையுமா? என பல கோணங்களில் விவாதங்கள் அலசப்பட்டு வருகின்றன.

இனி சின்னம் உதயசூரியன் தான்..எதுக்கு தனிக்கட்சி? திமுகவிலேயே ஐக்கியமாவோம்- நெருக்கடியில் மதிமுக இனி சின்னம் உதயசூரியன் தான்..எதுக்கு தனிக்கட்சி? திமுகவிலேயே ஐக்கியமாவோம்- நெருக்கடியில் மதிமுக

ஓபிஎஸ் புயலால் நம்பிக்கையில் திமுக

ஓபிஎஸ் புயலால் நம்பிக்கையில் திமுக

தேர்தல் களம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதிலும் அதிமுக- திமுக கூட்டணிகள் உன்னிப்பாக நகர்வுகளை கவனித்து வருகின்றன. தற்போது அதிமுகவில் உருவாகியுள்ள ஓபிஎஸ் புயல், திமுக என்னும் கப்பலை தேர்தல் களத்தில் தானாகவே கரைசேர்த்துவிடும் என்கிற நம்பிக்கை அந்த கட்சியினருக்கு வலுவாக ஏற்பட்டுவிட்டது.

திமுக அறிவுறுத்தல்

திமுக அறிவுறுத்தல்

இதனால் தேர்தல் களத்தில் பணத்தை கடந்த காலங்களைப் போல வாரி இறைக்காமல் இருக்கலாம் என்கிற மிதமிஞ்சிய நம்பிக்கையும் வந்துவிட்டதாம். இப்போதே தேர்தல் செலவுகளுக்கு உள்ளூர் அளவில் பார்த்து கொள்ளுங்கள்.. தலைமையிடம் இருந்து வழக்கமாக வரும் பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்கிற அறிவுறுத்தல்கள் போக தொடங்கிவிட்டதாம்.

கையை விரிக்கும் தலைமை

கையை விரிக்கும் தலைமை

திமுகவில் பணம் கொடுத்துதான் சீட்டே வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. கட்சி தலைமை தரக்கூடிய பணம் தேர்தல் கால இதர செலவினங்களுக்கு உதவியாக இருக்கும் என்பது வேட்பாளர்களாக விரும்பியவர்களின் கணக்கு. ஆனால் வெற்றி பெற்றுவிடுவோமே... என்கிற நினைப்பில் கட்சி தலைமை இப்போது பணம் தரப்போவதில்லை என கையை விரிக்க ஆரம்பித்துவிட்டது.

நெருக்கடியில் மா.செக்கள்

நெருக்கடியில் மா.செக்கள்

திமுக தலைமையின் இந்த முடிவு மாவட்ட செயலாளர்களுக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாம். கட்சி தலைமையே இப்படி சொல்லிவிட்டது..என்னிடம் எங்க பணம் இருக்கிறது என்பதுதான் இனி மா.செ.க்களின் பதிலாகவும் இருக்கும். இப்படி ஆளுக்கு ஒரு திசையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் தேர்தல் பணிகளே முடங்கிவிடுமே என்பதும் திமுகவினரின் ஆதங்கம்.

English summary
DMK's Dist. Secretaries very upset over the Party strategy for Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X